»   »  தனுஷ் இயக்கும் படத்தில் நடிப்பது இவரா..? ஆச்சரியத்தில் திரையுலகம்!

தனுஷ் இயக்கும் படத்தில் நடிப்பது இவரா..? ஆச்சரியத்தில் திரையுலகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் தனுஷ், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்து விட்டார். தற்போது 'மாரி 2' படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்து படம் இயக்கவிருக்கிறார்.

தனுஷ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் நாகார்ஜுனா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் தனுஷும் முக்கிய வேடத்தில் நடிப்பாராம்.

தொட்டதெல்லாம் வெற்றி என சினிமா உலகைக் கலக்கி வரும் தனுஷ், வேற்று மொழிப் படங்களைத் தயாரிப்பதோடு, தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கவும் இருக்கிறார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா

இந்தியத் திரையுலகத்தில் தனக்கென தனி இடத்தை வைத்திருப்பவர் நாகார்ஜுனா. நடிக்க வந்து சுமார் 30 வருடங்கள் ஆனாலும் இன்னும் அதே இளமையுடன் இருக்கிறார். 'ரட்சகன்', 'தோழா' ஆகிய நேரடித் தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

மாரி 2 ஷூட்டிங்குக்கு பிறகு

மாரி 2 ஷூட்டிங்குக்கு பிறகு

'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குனரான தனுஷ் தற்போது 'வட சென்னை' ஷூட்டிங் முடித்து 'மாரி 2' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் வேலை முடிந்ததும் தனுஷ், நாகார்ஜுனா நடிக்கும் படத்தை இயக்கலாம் என்கிறார்கள்.

தனுஷும் நடிப்பார்

தனுஷும் நடிப்பார்

தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள இந்தப் படம் சரித்திரப் படமாக இருக்கலாம் என்றும், தனுஷ் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

முதலில் சிரஞ்சீவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். ஆனால், அவர் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெறவுள்ளதால், கால்ஷீட் கொடுக்கமுடியவில்லையாம். அதனால் நாகார்ஜுனாவை நடிக்கவைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

கார்த்தியுடன் இணைந்து 'தோழா' படத்தில் நடித்த நாகர்ஜுனா அதனைத் தொடர்ந்து தனுஷுடன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

English summary
Dhanush is currently busy with the movie 'Maari 2'. Dhanush will going to direct Nagarjuna. Dhanush is also playing a prominent role in that film. Sri Thenandal films will going to produce Dhanush's next directorial.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil