Don't Miss!
- News
அதிகாலையில் நடந்த துயரம்..போர் விமானங்கள் விபத்து எப்படி நடந்தது? நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அஜித் ஸ்கெட்ச்சில் சிக்கிய தனுஷ்... விக்னேஷ் சிவனின் புது கணக்கு... செட்டாச்சுன்னா தெறிமாஸ் தான்
சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் இணைகிறார் அஜித்.
ஏகே 62 என்ற டைட்டில் தொடங்கவிருக்கும் அஜித்தின் புது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி..காரணம் இதுதான்!

சிக்ஸர் அடித்த சில்லா சில்லா
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து 'துணிவு' படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த மூன்று படங்களையுமே ஹெச் வினோத் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு ரிலீஸாவதால், ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சில்லா சில்லா' வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள இந்தப் பாடல், ரசிகர்களிடம் மிகப் பெரிய வ்ரவேற்பை பெற்றுள்ளது.

விரைவில் ஏகே 62 ஷூட்டிங்
துணிவு படத்தில் தனது போர்ஷன் முழுவதையும் முடித்துவிட்ட அஜித், அடுத்த படத்திற்காக ரெடியாகி வருகிறார். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் இது அஜித்தின் 62வது படமாக உருவாகிறது. தற்போதைக்கு 'ஏகே 62' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. போடா போடி, நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கியுள்ள விக்கி, ஏகே 62 படத்தை வித்தியாசமான ஜானரில் எடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அஜித் ஸ்கெட்ச்சில் தனுஷ்
ஏகே 62 படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட் இன்னும் அபிஸியலாக வெளியாகவில்லை. ஆனால், அஜித் ஜோடியாக திரிஷாவும், காமெடி கேரக்டரில் ஜிபி முத்துவும் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தனுஷிடம் விக்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தான் அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் தற்போது மல்டி ஸ்டார்ஸ் திரைப்படங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், முன்னணி ஹீரோக்கள் கேமியோ ரோலிலும் நடிக்கத் தொடங்கிவிட்டனர். அதனால், ஏகே 62 படத்தில் தனுஷும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு ரூட்டில் தனுஷ்
கமல் - லோகேஷ் கூட்டணியில் வெளியான விக்ரம் படத்தில் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர். அதேபோல், வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிளை பாடியுள்ள சிம்பு, அதில் மாஸ் பெர்பாமன்ஸ் ஒன்றும் கொடுத்துள்ளார். அதேபோன்ற ஒரு கேமியோ ரோலில் தனுஷ் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளாராம். அஜித்துக்காக தனுஷ் கண்டிப்பாக இந்த கேரக்டரில் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இயக்குநர் விக்னேஷ் சிவன் உட்பட படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.