Don't Miss!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Technology
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு வாழ்த்து சொன்ன தனுஷ்... என்ன சொல்லி வாழ்த்தி இருக்காருன்னு பாருங்கள்
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள பயணி வீடியோ இன்று வெளியிடப்பட்டது. மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள பயணி மியூசிக் ஆல்பம் வீடியோவை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டார். முதல் ஆளாக மகளுக்கு வாழ்த்தும் சொல்லி உள்ளார் ரஜினி.
ஐஸ்வர்யா சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளார் . கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு மியூசிக் வீடியோ இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார் ஐஸ்வர்யா. தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவை தமிழில் அனிருத் பாடி உள்ளார்.
விரைவில் ரசிகர்களை சந்திக்க வரும் பிச்சைக்காரன் 2... இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று துவக்கம்

மகளை வாழ்த்திய ரஜினி
பயணி வீடியோவை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரஜினிகாந்த், 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் என் மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் பயணி இசையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. நீ எப்போதும் சிறப்பாக இருக்க விரும்புகிறேன். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். லவ் யூ என பதிவிட்டுள்ளார். ரஜினியின் இந்த பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

காத்து மேல காகிதம் போல
காத்து மேல காகிதம் போல எனத் துவங்கும் பயணி வீடியோ பாடலை மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடி உள்ளனர். இந்த வீடியோவை பகிர்ந்து மோகன்லால், அல்லு அர்ஜுன் போன்ற திரை பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் எப்படி வாழ்த்தி இருக்கார் பாருங்கள்
இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் தனுஷும் வாழ்த்து கூறி உள்ளார். பிரிவை அறிவித்த பிறகு ஒருவரை பற்றி மற்றவர் இதுவரை ஏதும் பேசாமல் இருந்த நிலையில், முதல் முறையாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திற்கு ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார் தனுஷ். அதில், உங்களின் பயணி மியூசிக் வீடியோவிற்காக Congrats my friend ஐஸ்வர்யா தனுஷ் என குறிப்பிட்டுள்ளார்.

என்ன இப்படி வாழ்த்தி இருக்கார்
இதில் ஃபிரண்ட் என குறிப்பிட்டு தனுஷ் வாழ்த்தி உள்ளது தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே சமயம் பிரிவை அறிவித்தாலும் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து ஐஸ்வர்யா இதுவரை தனுஷின் பெயரை நீக்கவில்லை. பயணி டைட்டில் கார்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என போடப்பட்டிருந்தாலும், சோஷியல் மீடியா பக்கங்களில் தனது பெயரை ஐஸ்வர்யா கே தனுஷ் என்றே குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா. தனுஷின் இந்த வாழ்த்தை பார்த்து விட்டு, என்னது ஃபிரண்டா என ஆச்சரியத்துடன் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.