»   »  தயாரிப்பாளர் சங்கம் ரெட் எதிரொலி... கார்த்திக் சுப்பராஜைக் கழட்டி விட்டார் தனுஷ்?

தயாரிப்பாளர் சங்கம் ரெட் எதிரொலி... கார்த்திக் சுப்பராஜைக் கழட்டி விட்டார் தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறைவிக்கு அடுத்து தனுஷை வைத்துப் படம் இயக்கவிருந்த கார்த்திக் சுப்பராஜுக்கு, அந்தப் படத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இறைவி படம் எதிர்பாராத பல சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது

Dhanush withdrawn from Karthik Subbaraj's project

இந்தப் படம் தயாரிப்பாளர்களை அவமானப்படுத்துவதாகக் கூறி, கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட் எனும் தடை விதிக்கக் கோர, அது உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது.

இனி தமிழில் தயாரிப்பாளர் சங்கம் அனுமதித்தால் மட்டுமே கார்த்திக் சுப்பராஜால் படம் பண்ண முடியும் என்ற நிலை.

இதற்கிடையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அடுத்து தனுஷ்தான் நடிக்கவிருந்தார். ஆனால் இப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தடையைக் காரணமாகக் காட்டி, அவர் விலகிக் கொண்டதாகத் தெரிகிறது.

இதற்கு தயாரிப்பாளர் கதிரேசனும் முக்கிய காரணம் என்று தெரிகிறது. இறைவி படத்தில் கார்த்திக் சுப்பராஜ் மோசமாக சித்தரித்த தயாரிப்பாளர் கதிரேசன்தான் என்று கூறப்படுகிறது.

இந்த கதிரேசன் தனுஷுக்கு மிக நெருக்கமானவர். பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் தயாரிப்பாளர். கார்த்திக் சுப்பராஜுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம்.

ரெண்டையும் ரெண்டையும் கூட்டினா நாலு வருதா?

English summary
Sources say that Actor Dhanush has withdrawn from Karthik Subbaraj's next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil