D43 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... இனி கொண்டாட்டம் தான் !

சென்னை : தனுஷ் 43 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தனுஷின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிறந்த நாள் பரிசாக படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

கார்த்திக் நரேன்

கார்த்திக் நரேன்

துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பில்

படப்பிடிப்பில்

ஹாலிவுட் திரைப்படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பிய தனுஷ், ஓய்வு ஏதும் எடுக்காமல் தனுஷ்43 திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றார். தற்போது, இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாளை ரிலீஸ்

இந்நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ்43 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலுடன் நாளை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

செல்வராகவன் படத்தில்

செல்வராகவன் படத்தில்

இப்படத்தை அடுத்து தனுஷ் செல்வராகவன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். நானே வருவேன் படத்தின் டைட்டில் மற்றும் கதை தயாரிப்பாளர் தாணுவுக்கும், தனுஷூக்கும் பிடிக்காததால் கதையை மாற்றி இருக்கிறார் செல்வராகவன். அப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X