அவரோட பொண்ணுங்க இருக்காங்களே.. தனுஷ் அப்பா செஞ்சதுல அதுதான் சாதனை.. இட்லி கடை நடிகர் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

சென்னை: இயக்குநர் கஸ்தூரி ராஜா 90களில் ஃபேமஸான இயக்குநராக வலம் வந்தவர். அவரது இரண்டு மகன்களுமே சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். இப்போது நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் கஸ்தூரி ராஜா. இந்நிலையில் அவரது மகனும், நடிகரும், இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் உருவான இட்லி கடை படத்தில் முக்கியமான ரோலில் நடித்த இளவரசு ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார்.

இயக்குநர் மற்றும் நடிகரான விசுவிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக மாறியவர் கஸ்தூரி ராஜா. ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து என் ராசாவின் மனசிலே என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. பெயரில் மட்டும் பாரதிராஜாவின் ஸ்டைலை பின்பற்றாமல் தன்னுடைய ஸ்டைல் ஆஃப் மேக்கிங்கிலும் பாரதிராஜா போன்றே தன்னை வைத்துக்கொண்டார் கஸ்தூரி ராஜா. முதல் பட ஹிட்டுக்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் வரத்தான் செய்தன.

மகன்கள் சினிமாவில்: அப்படி அவர் இயக்கிய வீரத்தாலாட்டு, சிவாஜியை வைத்து என் ஆசை ராசாவே, விஜயகாந்த்தை வைத்து வீரம் விளைஞ்ச மண்ணு, நெப்போலியனை வைத்து கரிசக்காட்டு பூவே என இயக்கிய படங்கள் அவருக்கு பெயரையே பெற்றுக்கொடுத்தன. என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென அவரது மார்க்கெட் சரிந்தது. அப்படிப்பட்ட நிலைமையில்தான் தனது இரண்டு மகன்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

Dhanush s father Kasthuri Raja s achievement was making his daughters doctors says Ilavarasu To Filmibeat Tamil
Photo Credit:

இரண்டு பேரும் டாப்: துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் ஹீரோவாக அறிமுகமானார். செல்வராகவன் அந்தப் படத்தின் சில பகுதிகளை இயக்கினார். பிறகு செல்வா இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் திரைப்படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து அவர்கள் இரண்டு பேருக்குமென்று தமிழ் சினிமாவில் தனி இடம் கிடைத்தது. இவர்கள் தவிர்த்து அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டு பேரும் மருத்துவர்களாக இருக்கிறார்கள்.

தனுஷின் அவதாரங்கள்: இரண்டு மகன்களுமே பன்முக திறமை கொண்டவர்கள். செல்வராகவன், தனுஷ் நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் கலக்கிவருகிறார்கள். கடந்த ஒன்றாம் தேதிதான் தனுஷின் இயக்கத்தில் இட்லி கடை திரைப்படம் வெளியானது. படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. இதுவரை அந்தப் படம் 41 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இட்லி கடையில் முக்கியமான ரோல் நடித்திருந்த ஒளிப்பதிவாளரும், நடிகருமான இளவரசு ஃபில்மிபீட் தமிழுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி கொடுத்தார்.

இளவரசு பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கஸ்தூரி ராஜாவை பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கும். எப்படி தனது பிள்ளைகளையும் சினிமாவிலேயே வைத்திருக்கிறார் என்று. தனுஷ், செல்வராகவன் ஆகிய இரண்டு பேரையும் உருவாக்கியதைவிட; தனது இரண்டு மகள்களையும் மருத்துவர் ஆக்கியிருக்கிறார். அதுவும் சினிமாவில் இருந்துகொண்டே மருத்துவர் ஆக்கியிருக்கிறார். கஸ்தூரி ராஜா செய்ததிலேயே அதைத்தான் நான் சாதனையாக பார்க்கிறேன். அவரும் நல்ல இயக்குநர். ஆனால் பாரதிராஜா அலையில் அவரை யாரும் அதிகம் கொண்டாடவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X