Idli Kadai 10 Day Collection - தனுஷின் இட்லி கடை திறந்து பத்து நாட்கள் ஓவர்.. இத்தனை கோடி வசூலா?
சென்னை: தனுஷே இயக்கி நடித்திருந்த திரைப்படம் இட்லி கடை. இதில் அவருடன் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே, இளவரசு என பலர் நடித்திருந்தார்கள்.கடந்த ஒன்றாம் தேதி இப்படமானது ரிலீஸானது. தனுஷின் இயக்கம் என்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அதற்கேற்றபடி படமும் அமைந்திருந்தது. இந்நிலையில் படம் ரிலீஸாகி பத்து நாட்கள் ரிலீஸான சூழலில் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகராக மட்டும் கலக்கிவந்த தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார். அதில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா என பலர் நடித்திருந்தார்கள். பெரிதாக என்ன இயக்கியிருக்கப்போகிறார் என்று சந்தேகத்தோடு போன ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். வயதான தம்பதிகளின் நிறைவேறாத காதல் என்ற ஒற்றை லைனை வைத்துக்கொண்டு அட்டகாசமான படத்தை அளித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஆனால் அடுத்ததாக அவர் இயக்கிய ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் தோல்வியடைந்தன.
நடிப்பிலும் பெரிய வெற்றி இல்லை: இயக்கம்தான் அப்படி என்றால் நடிப்பிலும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி இல்லை. கேப்டன் மில்லர், குபேரா என வரிசையாக அவரது படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இட்லி கடை படத்தை ஆரம்பித்தார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவரே இயக்கவும் செய்தார்.

சூப்பரான வரவேற்பு: இதில் அவருடன் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, இளவரசு என பலர் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். கண்டிப்பாக ஒரு ஹிட் தேவை என்ற நிலை இருப்பதால் எப்படியாவது இதனை வெற்றியாக மாற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில்தான் படத்தில் உழைத்திருந்தார். உழைப்புக்கேற்ற ஊதியமாக படத்தை ரசிகர்கள் ஹிட்டாகிவிட்டார்கள்.
சொந்த ஊர் நினைப்பு: தனது சொந்த ஊரில் சிறு வயதில் பார்த்த கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவைகளை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியிருந்தார் அவர். இயக்கத்தில் பக்குவம், நடிப்பில் தரம், வசனத்தில் கூர்மை, திரைக்கதையில் சுவாரஸ்யம் என அத்தனை ஏரியாக்களிலும் ஒரு இயக்குநராக தனுஷ் வென்றிருந்தர். இதன் காரணமாக படத்துக்கு ஏகோபித்த ஆதரவை கொடுத்தார்கள் ரசிகர்கள்.
பத்து நாட்கள் வசூல்: அதிலும் படம் பார்த்த பிறகு பலரும்; தங்களது சொந்த ஊர் நியாபகம் வந்துவிட்டதாக கலங்கினார்கள். இதனால் பல வருடங்கள் கழித்து தனுக்கு திருப்திகரமான ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் இந்தப் படம் வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. அதன்படி படம் வெளியாகி நேற்றோடு பத்து நாட்கள் நிறைவடைந்திருக்கின்றன. இந்நிலையில் பத்தாவது நாள் மற்றும் பத்து நாட்களில் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று இப்படம் 1.25 கோடி ரூபாய் கலெக்ட் செய்து; இந்தியாவில் மொத்தம் 45. 50 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அந்த இணையதளம் அறிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











