Idli Kadai Day 8 Collection - இரண்டாவது வாரம் ஸ்டார்ட்.. இட்லி கடை கல்லா சூப்பர்.. 8வது நாள் வசூல் இதுதான்
சென்னை: தனுஷின் இட்லி கடை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. முதல் நாளே சூப்பர் வசூல் செய்த அப்படம் ஒரு வார இறுதியிலும் அதே நிலைமையில் நீடித்தது. சூழல் இப்படி இருக்க இரண்டாவது வாரத்தின் முதல் நாளான நேற்று தனுஷின் இட்லி கடை திரைப்படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அவருக்கு ஒரு ஹிட் கண்டிப்பாக தேவைப்படும் நேரத்தில் இந்தப் படம் ரிலீஸானதால் அவரைவிடவும் அவரது ரசிகர்கள் ரொம்பவே டென்ஷனோடு இருந்தார்கள். படம் வெளியான ஒன்றாம் தேதி அவர்களுக்கு திருப்திகரமான நாளாக அமைந்தது. ஏனெனில் ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டது.
படத்தில் என்ன ஸ்பெஷல்?: படத்தின் ஸ்பெஷலாக தனுஷின் இயக்கம், வசனம், நடிப்பு ஆகியவற்றை கூறுகிறார்கள். முக்கியமாக சொந்த ஊரின் முக்கியத்துவத்தை பேசி பல வருடங்கள் கழித்து ஒரு சினிமா வந்திருப்பதாகவும்; எமோஷனல் சீன்கள் எல்லாமே முழுவதுமாக கனெக்ட் ஆகிவிட்டது என்றும் கூறிய ரசிகர்கள்; அவர்களுக்குள் இப்படி ஒரு நல்ல இயக்குநர் இருக்கிறார் என்பதையும் இட்லி கடை நிரூபித்துவிட்டதாக மகிழ்ச்சியடைந்தார்கள்.

மைனஸே இல்லையா?: படத்தில் மைனஸே இல்லையா என்றால் இருக்கிறதுதான். தந்தையின் தொழிலைத்தான் மகன் பார்க்க வேண்டும் என்ற குல தொழிலுக்கு ஆதரவாக மைய கதை இருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. மேலும் படத்தின் முதல் பாதியில் இருந்த எதார்த்தமும், எமோஷனும் இரண்டாவது பாதியில் மிஸ்ஸிங் என்பதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறிவிட்டது என்பது உண்மை.
சூப்பராக கல்லா கட்டியது: விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் வசூல் ரீதியாகவும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸைத்தான் பெற்றது. முதல் நாளே 11 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரிக்கவில்லையென்றாலும் குறையாமல் இருந்தது. இப்படி வணிக ரீதியான மற்றும் விமர்சன ரீதியான வெற்றியைத்தான் தனுஷ் எதிர்பார்த்திருந்தார். அதனை இட்லி கடை கொடுத்திருக்கிறது.
இரண்டாவது வார தொடக்கம்: முதல் வார முடிவில் கிட்டத்தட்ட 42 கோடி ரூபாயை வசூலித்து கெத்து காண்பித்தது படம். இரண்டாவது வாரத்திலும் படத்துக்கு வசூல் வருமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இரண்டாவது வாரத்தின் தொடக்க நாளான நேற்றைய வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படமானது நேற்று மொத்தம் 1.30 கோடி ரூபாய் வசூலித்து மொத்தம் 43.50 கோடி ரூபாய் கல்லா கட்டியிருப்பதாக Sacnilk இணையதளம் கூறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











