Idli Kadai Day 4 collection : தனுஷின் இட்லி கடை.. நான்காம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கிய நிலையில், அவர் இயக்கிய 4வது திரைப்படம் இட்லி கடை. இப்படத்தில் ராஜ்கிரண்,சத்யராஜ், ஷாலினி பாண்டே, நித்யாமேனன், அருண்விஜய் ,சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 1 ந் தேதி வெளியான இப்படத்தின் நான்காம் நாள் வசூல் விவரத்தை பார்க்கலாம்.

இட்லி கடை படத்தின் கதை சிம்பிளா ஆனா கதையாக இருந்தாலும், மனசைத் தொடும் கதையாக உள்ளது. ராஜ்கிரண், கீதா கைலாசம் ஒரு கிராமத்துல இட்லி கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்தும் இட்லி கடை அந்த கிராமத்தில் நல்ல பெயர்,அதற்கு காரணம் ராஜ்கிரணின் கைபக்குவம். அவர்களோட ஒரே பையன் தான் தனுஷ், நகரத்திற்கு போக வேண்டும் என ஆசைப்படுவதால், ஒரே மகனாக இருந்தாலும், அவனின் ஆசைக்காக தனுஷை நகரத்திற்கு அனுப்பிவைக்கிறார். ஒரு கட்டத்தில் அப்பா அம்மா மரணத்துக்குப் பிறகு மீண்டும் கிராமத்துக்கு வரும் தனுஷ். அப்பா நடத்துற கடையை மீண்டும் உயிர்ப்பிக்குறான். ஆனா, அந்த இடத்துல தான் பெரிய பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து தனுஷ் எப்படி மீண்டார் என்பது தான் இட்லி கடை படத்தின் கதை.

Dhanush Idli Kadai box office
Photo Credit:

படத்தின் கதை: சிறுவயதில்,தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இருக்கும் போது, அங்கிருந்த இட்லி கடை, அவர் பார்த்து ரசித்த மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை ஆகியவற்றை கொஞ்சம் கற்பனை கலந்து இட்லிக்கடை படத்தை உருவாக்கி இருக்கிறார் தனுஷ். இத்திரைப்படம் ஒரு ஃபீல் குட் திரைப்படமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. இப்போதுள்ள இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம், இந்த படத்தை பார்க்கும் இளைஞர்களுக்கு அவர்களின் அப்பாக்களை மதிக்கும் எண்ணம் வரும் என்றெல்லாம் படம் பார்த்தவர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

நான்காம் நாள் வசூல்: படம் வெளியான முதல் நாள் 11 கோடி மட்டுமே வசூலித்தது, இரண்டாம் நாளான வியாழக்கிழமை 9.75 கோடியும், மூன்றாம் நாள் 5.5 கோடியை வசூலித்தது. நான்காம் நாளான நேற்று 6.15 கோடியை வசூலித்துள்ளது. அதாவது படம் வெளியான நான்கு நாட்களில் இதுவரை 32.50 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து இருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 2ந் தேதி வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக புகழ்ந்து வருவதால், இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்த இட்லி கடை படத்தின் வசூல் வெகுவாக சரிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X