Bayilwan Review: இட்லி கடை படம் எப்படி இருக்கு? நிச்சயம் விருது கிடைக்கும்.. பயில்வான் விமர்சனம்!

சென்னை: டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் இட்லி கடை. இந்த படத்தை தனுஷி இய்க்கி நடித்துள்ளார். மேலும், இதில், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தனுஷ் இந்த படத்தை எழுதி இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.

இட்லி கடை திரைப்படத்தின் கதை என்னவென்றால், ராஜ்கிரண் ஒரு கிராமத்தில் இட்லி கடையை நடத்தி வருகிறார். இந்த கடையின் இட்லி மிகவும் சுவை மிகுந்ததாக இருப்பதால், கிராமத்தில் எல்லோரும் இந்த கடைக்கு விரும்பி சாப்பிட வருகின்றனர். ராஜ்கிரணின் மகனான தனுஷுக்கு இந்த கிராமத்தை தாண்டி பல ஊர்களிலும் இட்லி கடையை திறக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால், ராஜ்கிரண், எனக்கு என் கையால் மாவை அரைத்து பக்குவமாக செய்வதில் தான் நிம்மதி. நான் வேறு எங்கும் வரமாட்டேன் என்று சொல்ல தனுஷ் வெளிநாட்டுக்கு செல்கிறார்.

idli kadai Dhanush
Photo Credit:

தனுஷின் இட்லி கடை: அங்கு சத்யராஜுக்கு சொந்தமான மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்கிறார் தனுஷ். இவரின் நடவடிக்கைகள் சத்யராஜுக்கு பிடித்து போக, தனது மகளான ஷாலினி பாண்டேவை திருமணம் செய்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. பெரிய பணக்காரர்கள் அனைவரும் திருமணத்திற்கு அழைக்கப்படுகின்றனர். இந்த நேரத்தில் தனுஷின் தந்தையான ராஜ்கிரண் இறந்து விடுவதாக தனுஷுக்கு தகவல் வர, தனுஷ் இந்தியாவிற்கு வருகிறார். அப்பாவின் உடலை பார்த்த பிறகு, அப்பாவின் அரவாணப்பையும் அன்பையும் இழந்துவிட்டோமே என வருத்தப்படுகிறார். அப்பா இறந்த நான்கு நாட்களிலேயே அம்மாவும் இறந்துவிட அதே வீட்டில், தனியாக யாருமே இல்லாமல் அனாதையாக இருக்கும் தனுஷூக்கு, அப்பா நடத்தி வந்த இட்லி கடையை தொடர்ந்த நடத்த முடிவு செய்கிறார்.

படத்தின் கதை: அந்த கடைக்கு எதிரில் சமுத்ராகனியின் புரோட்டா கடை வைத்து இருக்கிறார். அவர் தனுஷிடம் இட்லி கடையைதனக்கு விற்றுவிடும்படி கேட்கிறார். ஆனால், தனுஷ் இட்லி கடையை தொடர்ந்து நடத்துவதால், இருவருக்கும் இடையே பிரச்சனை மோதல் ஏற்படுகிறது. அதன் பின் தனுஷ், ஷாலினி பாண்டேவை திருமணம் செய்து கொண்டாரா... இவருடைய இட்லி கடை பிரபலமானதா என்பது தான் இட்லி கடை திரைப்படத்தின் கதை.

நிச்சயம் விருது கிடைக்கும்: இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண் அப்பாவாக வாழ்ந்து இருக்கிறார். அவருடைய பேச்சு, அசைவு, நடிப்பு என அனைத்தும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில், பல இடங்களில் வசனம் எதுவும் பேசாமல் தனது பாவணையாலே ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார் தனுஷ். நிச்சயமாக இந்த திரைப்படத்திற்கு தமிழக அரசின் விருது நிச்சய கிடைக்கும். அதே போல இந்திய அரசின் தேசிய விருதும் தனுஷுக்கு கிடைக்கும். அப்படி கொடுக்கவில்லை என்றால் அது விருதே வீண் என அர்த்தம். இந்த படத்தில் தனுஷ் இயக்குநராகவும் நடிகராகவும் ஜெயித்து இருக்கிறார். நிச்சயமாக இந்த படம் குடும்படங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும் என்று பயில்வான் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X