Idli kadai Review: தனுஷின் இட்லி கடை .. இட்லி வெந்துதா...வேகலையா? செய்யாறு பாலுவின் விமர்சனம்!
சென்னை: தனுஷ் நடித்த இட்லி கடை திரைப்படம் என்று வெளியாகி, ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் செய்யாறு பாலு, தனது youtube சேனலில் படம் குறித்து விமர்சம் அளித்துள்ளார். அதன் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படத்தில் ராஜ்கிரணின் மகனாக தனுஷ் நடித்து இருக்கிறார். ராஜ்கிரண் தனது கிராமத்தில் ஒரு இட்லி கடை வைத்திருக்கிறார். அந்த இட்லிக்கு ஊரே அடிமையாக இருக்கிறது. அந்த அளவுக்கு சுவை மிக்கதாக இட்லி இருக்கிறது. ராஜ்கிரண் தனது கடைக்காக தானே மாவை அரைத்து இட்லி, சட்னி, சாம்பார் என அனைத்துமே தன்னுடைய கைப்பட செய்கிறார். அவருடைய கை பக்குவத்தால் இட்லி மிகவும் சுவையானதாக இருக்கிறது. இதனால், அந்த கிராமம் முழுக்க ராஜ்கிரணின் இட்லி கடை மிகவும் பிரபலமான கடையாக உள்ளது.

தனுஷின் இட்லி கடை: ராஜ்கிரணின் மகனான தனுஷும் சமையலில் கைதேர்ந்தவராக இருப்பதால், தனது இட்லி கடையை ஒவ்வொரு ஊரிலும் திறக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால், ராஜ்கிரண் அதற்கு ஒற்றுக்கொள்ளாததால், வெளிநாட்டிற்கு செல்லும் தனுஷ் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்றில் சீப் ஆக இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சத்யராஜின் மகளான ஷாலினி பாண்டேவை தனுஷூக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகளும் நடக்கிறது. இதே நேரத்தில் சத்யராஜின் மகரான அருண் விஜய்க்கு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த தனுஷை தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை. இதனால் பல இடையூறுகளை செய்கிறார். அதே நேரம் தனுஷின் சொந்த ஊரில், சில பிரச்சனைகளை நடக்கிறது. அந்த பிரச்சனைகளை தனுஷ் எப்படி சமாளித்தார்? ஷாலினி பாண்டேவுடன் திருமணம் நடந்ததா... இல்லையா... என்பது தான் இந்த இட்லி கடை திரைப்படத்தின் கதை.
நல்ல நடிப்பு : சாதாரண ஒரு கிராமத்து கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனரும் நடிகர்வுமான தனுஷ். இந்த திரைப்படத்தில் எமோஷனல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. படத்தின் முதல் பாதியில் எமோஷனல், காதல், காமெடி என விறுவிறுப்பாக செல்கிறது. அதில் மிகவும் குறிப்பாக தனுஷின் நடிப்பு பாராட்டும் வகையில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் மட்டுமில்லாமல், நித்யாமேனன், ராஜ்கிரண், அருண்விஜய், பார்த்திபன், சமுத்திரக்கனி, ஷாலினி பாண்டே என அனைவரும் கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மைனஸ்: படத்தின் மைனஸ் என்னவென்றால், முதல் பாதியைவிட இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக செல்கிறது. முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்ற தனுஷ், இரண்டாம் பாதியில் சோர்வு அடைந்துவிட்டார். அது போல படத்தில் நிறைய லாஜிக் மீரல்கள் இருக்கிறது. அதையெல்லாம் தனுஷ் சரி செய்து இருக்க வேண்டும். முதல் பாதி போல இரண்டாம் பாதியும் இருந்து இருந்தால், தனுஷின் இட்லிக்கடை திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடு திரைப்படமாக இருந்த இருக்கும் என்று செய்யாறு பாலு தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











