Idli Kadai Day 7 Collection - ஒரு வாரம் ஆகியும் தனுஷின் இட்லி கடை மூடவில்லையே.. 7வது நாள் வசூல் செம

சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவான இட்லி கடை திரைப்படம் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. நட்சத்திர பட்டாளத்தின் துணை மட்டுமில்லாமல் மேக்கிங், கதை ஆகியவைகளின் துணையோடும் படம் வெற்றியடைந்திருப்பது ஆரோக்கியமான விஷயமே. இந்நிலையில் படம் வெளியாகி நேற்றோடு ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் நிலையில் அதன் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

இட்லி கடை திரைப்படம் கடந்த ஒன்றாம் தேதி வெளியானது. தனுஷே இயக்கி நடித்திருந்த அந்தப் படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே, நித்யா மேனன், இளவரசு என பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் ரிலீஸானது. ஏனெனில் தனுஷ் தரமான ஒரு ஹிட்டை கொடுத்து வருட கணக்கில் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இட்லி கடையில் கூட்டம்: படம் பார்த்த ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. தனுஷின் பக்குவமான இயக்கம், திரைக்கதை, வசனம் என அத்தனையும் சிறப்பாக இருந்ததால் அப்படத்தை பார்த்தவர்களுடன் கனெக்ட் ஆகிவிட்டது. அதுவும் ரத்தமும், துப்பாக்கி சத்தமும் சூழ்ந்திருக்கும் இப்போதைய தமிழ் சினிமாவில் இப்படத்தை பார்ப்பதற்கு இதமாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

Dhanush s Idli Kadai Seventh Day Box Office Collection is 1 50 Crores Here are Detail Report
Photo Credit:

கருத்துக்கள் பல விதம்: இப்படத்தில் தந்தையின் தொழிலைத்தான் பார்க்க வேண்டும் என குல தொழிலுக்கு தனுஷ் ஆதரவாக செல்கிறாரோ என்ற கேள்வியை ஒருதரப்பினர் முன்வைத்தாலும்; சகிப்புத்தன்மை குறைந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அகிம்சையை வலியுறுத்தும் கருத்தை தனுஷ் படத்தில் வைத்திருந்ததை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும் என்பதும் இன்னொரு தரப்பினரும் கருத்தாக இருக்கிறது. இவையெல்லாம் தாண்டி சொந்த ஊர் பற்றிய நினைவுகளை கிளப்பிவிட்டிருக்கிறார் தனுஷ்.

நல்ல வசூல்: இப்படி படம் விமர்சன ரீதியாக அதிகம் கொண்டாடப்பட்டும், கொஞ்சம் அடிபட்டும் இருக்கிறது. ஆனால் வசூலில் எந்தக் குறையும் இல்லை. இந்தியாவில் அந்தப் படம் வெளியான முதல் நாளில் 11 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் போட்டியாக காந்தாரா வந்தாலும் ஆறு கோடி ரூபாயும் என வசூலித்து ரேஸில் நிதானமாக தனக்கான இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது. காந்தாராவின் வருகை இட்லி கடையில் கூட்டத்தை குறைத்துவிடுமோ என்ற அச்சமும் படக்குழுவிடம் இருந்தது.

ஸ்டாண்டர்டான வசூல்: ஆனால் நல்வாய்ப்பாக அப்படி எதுவும் இல்லை. ஆறாவது நாளான திங்கட்கிழமை 1.55 கோடி ரூபாயை இந்தியாவில் வசூலித்ததாக கூறும் Sacnilk இணையதளம்; ஏழாவது நாளான நேற்றும் 1.50 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. அந்த தளத்தின் கூற்றுப்படி படம் வெளியாகி நேற்றோடு ஒரு வாரம் வெளியாகியிருக்கும் நிலையில் மொத்தம் 41.65 கோடி ரூபாயை இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் படம் கலெக்ட் செய்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X