Just In
- 1 hr ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 2 hrs ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- News
மூன்றரை மணி நேரம் காக்க வைத்து... பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவமதிப்பு -விவசாயிகள் சங்கம்
- Automobiles
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹரீஸ் கல்யாணின் தாராள பிரபு.. ஸ்பெர்ம் டோனராக நடிக்கிறார்... செம கதை மச்சி!
சென்னை : நடிகர் ஹரீஸ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் தாராள பிரபு படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியில் 2012ம் ஆண்டு வெளியான விக்கி டோனர் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த தாராள பிரபு. இந்த படத்தில் ஹரீஸ் கல்யாண். பத்மஶ்ரீ விவேக், தான்யா ஹோப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். கிருஷ்ணா மாரிமுத்து படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது .

தாராள பிரபு படத்தின் டீசர் இதற்கு முன்பே வெளியிடபட்ட நிலையில் இப்போது தான் படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்திற்காக முதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள் ஒருங்கிணைந்து இசையமைத்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
படத்திற்காக அனிரூத் ரவிசந்தர், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, மேட்லி பூளுஸ், ஊர்கா தி பேண்ட், ஷேன் ரோல்டன் மற்றும் விவேக்-மெர்வீன் ஆகிய இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர் .

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் மது ஷாலினி.. ரேஞ்சரில் நடிக்கிறார் !
விக்கி டோனர் படம் 2012ல் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் , இந்த படத்தை ஹிந்தியில் ஆயுஸ்மான் குரானா நடித்திருப்பார். 8வருடங்கள் கழித்து தமிழில் ரீமேக் செய்கிறார்கள் அதிலும் தமிழில் மிக முக்கியமாக வளர்ந்து வரும் நடிகர் ஹரீஸ் கல்யாண் ரீமேக்கில் நடிக்கிறார். இதுவே படத்தின் மீது இருக்கும் எதிர்பார்பை எக்கசக்கமாக அதிகரித்து உள்ளது .
படத்தில் ஒரு டாக்டரின் கட்டாயத்தால் ஹீரோ ஸ்பெர்ம் டோனராக இருப்பார், அவரால் பலரும் குழந்தை பாக்யம் பெருவார்கள் இவரின் வாழ்வில் இதனால் எத்தனை நன்மைகள் நடந்தன எத்தனை தீமைகள் நடந்தன இறுதியில் என்ன என்பதை மிக சுவாரஸ்யமான படமாக ஹிந்தியில் எடுத்திருப்பார்கள் . தமிழிலும் அதே சுவாரஸ்யம் குறையாமல் எடுத்திருப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டிருக்கிறது .

இது போன்ற படங்கள் தமிழுக்கு மிகவும் புதுசாகும் ஆனால் படத்தில் பேசப்பட்டிருக்கும் விசயம் புதிதல்ல ஏனெனில் சமூகத்தில் பலரும் ஸ்பெர்ம் டோனர்களால் குழந்தை பெற்று தான் வருகிறார்கள். இதனால் கட்டாயம் மக்களை படம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
தாராள பிரபு படம் நடிகர் ஹரீஸ் கல்யாணுக்கு மிக பெரிய திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தடம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தான்யா ஹோப் நடித்திருக்கிறார். தாராள பிரபு படம் வரும் மார்ச்சில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.