»   »  இன்று பாக்ஸ்ஆபீஸில் மோதும் தர்மதுரை, நம்பியார்: ஜெயிக்கப் போவது யாரு?

இன்று பாக்ஸ்ஆபீஸில் மோதும் தர்மதுரை, நம்பியார்: ஜெயிக்கப் போவது யாரு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி நடித்த தர்மதுரையும், ஸ்ரீகாந்த் தயாரித்து நடித்துள்ள நம்பியார் படமும் இன்று ரிலீஸாகின்றன.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள தர்மதுரை படம் இன்று ரிலீஸாகின்றது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


Dharmadurai clashes with Nambiar today

யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகிவிட்டன. தர்மதுரை தவிர்த்து ஸ்ரீகாந்த் நடித்துள்ள நம்பியார் படமும் இன்று வெளியாகிறது. இயக்குனர்கள் எஸ்.எஸ். ராஜமவுலி, விக்ரமன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த கணேஷ் நம்பியார் படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார்.


Dharmadurai clashes with Nambiar today

நம்பியார் படத்தில் சந்தானம் முக்கிய கதபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார்.


Dharmadurai clashes with Nambiar today

நம்பியார் படம் மூலம் கணேஷ் எப்படி இயக்குனராகியுள்ளாரோ அதே போன்று ஸ்ரீகாந்த் தயாரிப்பாளர் ஆகியுள்ளார். மேலும் சந்தானமும் இந்த படம் மூலம் பாடகர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Sethupathi's Dharmadurai and Srikanth's Nambiar are hitting the screens today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil