Don't Miss!
- News
திமுக எம்.எல்.ஏக்கள் அள்ளிக் கொடுத்த 1.29 கோடி! அதிமுக எம்.எல்.ஏக்கள் மனம் இறங்காதது ஏன்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
'ஒரிஜினல் தர்மதுரை' ரஜினிகாந்துக்கு100வது நாள் கேடயம் வழங்கி மகிழ்ந்த தர்மதுரை குழு !
1991-ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்மதுரை. ரஜினியுடன் கவுதமி, எம்எஸ் மது, செந்தில், சரண்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரஜினியின் காமெடியும் உணர்ச்சிகரமான நடிப்பும் பார்த்தவர்களை பரவசப்படுத்திய படம்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகிறது இந்தப் படம் வெளியாகி. இந்த நிலையில் அந்தப் படத்தின் தலைப்பில் விஜய் சேதுபதியை வைத்து இயக்குநர் சீனு ராமசாமி படம் இயக்கினார். சீனு ராமசாமிக்கு மிகவும் தேவைப்பட்ட வெற்றியை இந்தப் படம் தந்தது.

விஜய் சேதுபதி நடித்த இந்த தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அளிக்க வேண்டும் என விரும்பினர் படக்குழுவினர். அதை மனமகிழ்ந்து ஏற்றுக் கொண்ட ரஜினி, தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தினார்.
இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது. தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ், இயக்குநர் சீனு ராமசாமி, படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஆகியோரைப் பாராட்டியதுடன், படத்தின் நல்ல விஷயங்களைக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் ரஜினி.
விஜய் சேதுபதி, எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
சீனு ராமசாமியின் படங்களில் அவர் கவனித்து வரும் சமூக அக்கறையுள்ள காட்சிகளை விவரித்தும் பாராட்டினார் ரஜினி.
வில்லனாக நடிக்கும் போது தனது முழுமையான நடிப்புத்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது அந்த வகையில் தாரைத் தப்பட்டை, மருது போன்ற படங்களில் சிறப்பாக நடித்து முன்னேறி வருவதாக நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷையும் பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
"முள்ளும் மலரும் - காளி தந்த பாதிப்பில் சினிமாவில் நுழைந்த எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததும், அவரின் பாராட்டும் தெம்பும் இந்த நாள் தந்த மிக சிறந்த பரிசாக நான் பார்க்கிறேன்," என்றார் இயக்குநர் சீனு ராமசாமி.
'உண்மையான, ஒரிஜினல் தர்மதுரைக்கு தங்கள் தர்மதுரையின் 100ம் நாள் கேடயத்தை வழங்கியதில் மகிழ்ச்சி' என்று தெரிவித்தனர் தர்மதுரை படக்குழுவினர்.