»   »  பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா உடல் நிலையில் முன்னேற்றம்- ஹேமமாலினி

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா உடல் நிலையில் முன்னேற்றம்- ஹேமமாலினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பழம் பெரும் இந்தி நடிகர் தர்மேந்திரா உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மும்பை ஜூஹூவில் வசித்து வரும் அவருக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சேர்த்தனர்.

Dharmendra is recovering well, says Hema Malini

அங்கு டாக்டர்கள் பரிசோதனையில், வயிற்று கோளாறு காரணமாக வாந்தி மற்றும் காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சைக்கு பின்னர் அவர் வேகமாக குணமடைந்து வருவதாக அவரது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினி தெரிவித்தார். இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் அவர் கூறினார்.

English summary
Bollywood veteran actor Dharmendra was rushed to Mumbai’s Nanavati Hospital as he complained of uneasiness and pain. The actor is at present admitted in the hospital.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil