Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நான் அப்பாவை ரிவென்ஞ் எடுப்பேன்… தில்லு இருந்தா போராடு இசை விழாவில் வனிதா பேச்சு !
சென்னை : நான் விஜயகுமார் பொண்ணு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளேன் என்று நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.
சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த வனிதா பிக் பாஸ் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமானார். தற்போது ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது இவர், எஸ். கே முரளீதரன் இயக்கத்தில் தில்லு இருந்தா போராடு என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தில்லி இருந்தா போராடு
இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய வனிதா, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்குபிறகு முதன் முதலில் இந்த திரைப்படத்தில் நான் ஒப்பந்தம் ஆனேன். சிறுவயதில் சினிமா எனக்கு தேவையில்லைனு ஒரு முட்டாள் தனமான முடிவு எடுத்துவிட்டேன் ஆனால், நான் மீண்டும் விட்ட இடத்தைபிடிக்க வேண்டும். மீண்டும் ஒரு வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்து இருக்கிறார் என்றார்.

புல்லட் ஓட்டினேன்
இந்த படத்தில் புடவை கட்டிக்கொண்டு புல்லட்டில் வருவது போல ஒரு சீனுக்காக புல்லட் ஓட்டக்கற்றுக்கொண்டேன். இந்த கால கட்டத்தில் இது போன்ற சவால்களை எதிர்கொண்டு ஜெயிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் என்னை நடிகை என்ற முறையில் அணுகி கதை கூறிய முரளீதரனுக்கு மிகவும் நன்றி.

நான் விஜயகுமாரின் மகள்
இந்த திரைப்படத்தில் எட்டி உதைப்பது போலவும் காட்சிகள் உள்ளது. இந்த காட்சியில் நடிக்கும் போது எனது அப்பாவின் ஞாபகம் வந்தது. அவரை நினைத்து நான் பெருமை படுகிறேன். என் அப்பா விஜயகுமார் மாதிரி ஒரு டெலிகேட்டான ஆள பார்க்கவே முடியாது. நான் விஜயகுமாரினுடைய பொண்ணுதான் என்பதை ரிவென்ஞ் எடுத்து மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளேன் . அப்பாவை போல பல விருதுகள் வாங்கி, அவர் நடித்தது போல பல கதாபாத்திரங்களில் நடித்து, மக்கள் கிட்ட நல்ல நடிகை என பெயர் எடுப்பேன் என்றார்.

முக்கிய நடிகர்கள்
இத்திரைப்படத்தில் கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா ஜோடியுடன் யோகிபாபு, மனோபாலா, வனிதா விஜயகுமார், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.