»   »  தில்லுக்குத் துட்டு: ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்கும் சந்தானம்

தில்லுக்குத் துட்டு: ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்கும் சந்தானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தில்லுக்குத் துட்டு படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் இரண்டையும் நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

காமெடி நடிகராக இருந்து நடிகராக மாறியிருக்கும் சந்தானம் தற்போது தில்லுக்குத் துட்டு, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Dhillukku Dhuddu Trailer & Audio releasing tomorrow

இதில் தில்லுக்குத் துட்டு படம் ஜூலை 1 ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், சந்தானத்தின் தந்தை மரணத்தால் அது தள்ளிப் போனது.


இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் இரண்டையும் ஒருசேர நாளை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. திகில்+ காமெடி இரண்டையும் கலந்தது போன்று இப்படத்தின் கதையை அமைத்துள்ளனர்.


'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கியிருக்கும் இப்படத்தில் சந்தானம், ஷான்யா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், சிங்கமுத்து, கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.


வழக்கமாக பேயப்படங்களில் நாயகன் பேயைப் பார்த்து பயப்படுவார்.ஆனால் இப்படத்தில் சந்தானத்தைப் பார்த்து பேய்கள் பயப்படுவது போன்று கதையை அமைத்துள்ளனர்.


சமீபகாலமாக நகைச்சுவைப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் தில்லுக்குத் துட்டு கண்டிப்பாக இணையும் என்று படக்குழு நம்பிக்கைத் தெரிவிக்கிறது.


தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சந்தானத்துடன் இணைந்து, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

English summary
Santhanam's Dhillukku Dhuddu Trailer & Audio releasing tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil