»   »  தில்லுக்கு துட்டு... லொள்ளு சபா!

தில்லுக்கு துட்டு... லொள்ளு சபா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'நடிச்சா ஹீரோ சார்.. நா வெய்ட் பன்றேன் சார்' ன்னு சந்தானம் ஒரு முடிவெடுத்து முழுமூச்சா இருக்காரு. இப்டித்தான் தெலுங்குல சுனில்ன்னு ஒரு காமெடியன். குண்டா கருப்பா காமெடி பன்னிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தவரு திடீர்னு சிக்ஸ் பேக் வச்சி நா ஹீரோடான்னு வந்து நின்னுட்டாரு. ரெண்டு படமும் ஓடுச்சி. இப்பவரைக்கும் ஹீரோவாதான் மெய்ண்டெய்ன் பன்றாப்ள. நம்ம சந்தானம் நடிச்ச 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' கூட அந்த சுனில் நடிச்சி ராஜமெளலி இயக்கிய படம்தான்.

நாகேஷ், கவுண்டர், வடிவேலு, கருணாஸ் ன்னு சில நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக நடிச்சி ஒரு சில வெற்றி தோல்விகளுக்குக்கப்புறம் திரும்பவும் நகைச்சுவையாளராகவே தொடர்ந்து வெற்றி பெற்றிருக்காங்க. ஒரு காமெடி நடிகர ஒரு ஹீரோவா அவ்வளவு சீக்கிரம் நம்மளால ஏத்துக்க முடியறதில்லை. நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படற கதைகள்ல மட்டுமே அவர்களை கொஞ்சம் பொறுத்திப் பாக்க முடியுமே தவிர, ரெகுலர் ஹீரோக்களைப் போல திடீர்னு இவங்களும் சீரியஸாக மாறி டூயட், டான்ஸ், ஃபைட்டு, புத்திமதின்னு சொல்றத நம்மாள ஜீரணிச்சிக்க முடியறதில்லை.

Dhillukku Thuttu fans reaction

ஆனா சந்தானத்த பொறுத்த மட்டுல அவர ஹீரோவா ஏத்துக்குறதுல தயக்கம் எதுவும் இல்லை. இனி இருக்கவும் இருக்காது. ஏன்னா ஏற்கனவே அவர் காமெடியனா நடிச்சா கூட, எந்த ஹீரோவோட நடிச்சாலும் ஸ்க்ரீன்ல சந்தானத்தோட டாமினேஷந்தான் இருக்கும். வடிவேலுவப் போல எப்பொழுதும் அடிவாங்கி சிரிக்க வைக்காம, ஹீரோவுக்கு ஈக்குவலா கெத்தான கேரக்டர்லதான் நடிச்சிருக்காரு. அதானால காமெடியன் சந்தானத்த ஹீரோ சந்தானமா பாக்குறதுல பெரிய கஷ்டமா படல.

அதுமட்டும் இல்லாம கெட்டப்பெல்லாம் மாத்தி ஆளு செமயா இருக்காரு. சந்தானத்தோட வாழ்க்கைய செதுக்குனதுல ஒரு முக்கியமான பங்கு இயக்குநர் ராம்பாலாவுக்கு உண்டு. லொள்ளு சபா மூலம் சந்தானத்தோட திறமையெல்லாம் உலகத்துக்கு காட்டுனவர் அவர்தான். அதற்கான ஒரு நன்றிக்கடனா கூட இந்தப் படம் இருக்கலாம்.

ட்ரெயிலர்லயே கதையயும், இது என்ன மாதிரி படம்ங்குறதையும் சொல்லிருந்தாங்க. ஆவி குடியிருக்க ஒரு காட்டு பங்களா.. யார் அதுக்குள்ள போனாலும் செத்துருவாங்க. அங்க சந்தானத்த உள்ள கொண்டு வந்து பேயக் கலாய்க்கனும். அதுக்கான ஏற்பாடுகள முதல் பாதில பாக்குறாங்க.

வழக்கமான மாஸ் ஹீரோக்களைப் போல ஒரு இண்ட்ரோ சாங்க... அடுத்ததா காதல்.. காதலுக்காக ஃபைட்டுன்னு இவ்வளவு நாளா சந்தானம் கூட நடிச்ச ஹீரோக்கள் என்ன பண்ணாங்களோ அத இப்ப சந்தானம் பண்றாரு. அங்கங்க நிறைய ஒன்லைன் கவுன்ட்டர்ஸ் சிரிக்க வைக்குது. ஹீரோயினும் சரி, சந்தானம்-ஹீரோயின் லவ் ட்ராக்கும் சரி செம மொக்கை. இப்பல்லாம் காலேஜ்ல லவ் பண்ணிட்டு ரெண்டு வருஷம் ஃபாரின் பொய்ட்டு வந்த புள்ளைங்களே பசங்கள மறந்துரும்ங்க. இதுல தம்மாதூண்டு வயசுல ஸ்கூல்ல படிச்சப்போ சந்தானத்த புடிக்கும்னு, இப்ப தேடிப்போய் காதலைச் சொல்றதுங்கறதெல்லாம் கப்பி.

Dhillukku Thuttu fans reaction

முதல் பாதி முழுசுமே கிட்டத்தட்ட லொல்லு சபாவ டிவில பாக்குற ஒரு ஃபீல் தான். சந்தானம் மட்டும் கெத்தா இருக்காரு. மத்தபடி சூழல், மத்த ஆட்கள் எல்லாமே அதே லொல்ளு சபா செட்டு. ஆனா முதல் பாதிய போர் அடிக்குதுன்னுலாம் சொல்ல முடியாது. காட்சிகள் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்.

மொட்டை ராஜேந்திரன் உள்ள வந்து செகண்ட் ஹாஃப் ஆரம்பிச்சப்புறம் எல்லா சீனும் காமெடிதான். கிட்டத்தட்ட செகண்ட் ஹாஃப்லாம் சுந்தர்.சி படம் பாத்து நான் ஸ்டாப்பா சிரிக்கிற ரேஞ்சில இருந்துச்சி.

இப்பல்லாம் பேய் இல்லாம கூட பேய் படம் எடுப்பாங்க. ஆனா மொட்டை ராஜேந்திரன் இல்லாம பேய் படம் எடுக்குறது ரொம்ப கஷ்டம் போல. மனுஷன் பின்னி எடுக்குறாப்ள. அவரு சாதாரணமா பேசுனாலே throat infection ஆன மாதிரி தான் இருக்கும். இதுல throat infection ஆயிருந்தப்போ டப்பிங் பேசிருப்பாரு போல. மொத ரெண்டு மூணு காட்சில ஓவர் கரகரப்பு. என்ன பேசுனாருண்ணே புரிய மாட்டுது.

கருணாஸ் வழக்கம்போல அருமை. கூட ஆனந்தராஜூம் சேர்ந்து லூட்டி அடிக்கிறாரு. லொள்ளு சபா மனோகர ஒரே சீனோட கயட்டி விட்டாங்க. இன்னும் ரெண்டு மூணு சீன் யூஸ் பன்னிருக்கலாம். படத்துக்கு இன்னொரு ப்ளஸ் தமன். பாட்டு நல்லா போட்டுருக்காரு. பின்னணி இசை கூட ஓக்கே. அதே மாதிரி ஸ்டண்டும் நல்லா பண்ணியிருக்காங்க. சும்மா டமால் டுமீல்னு அடிச்சி பறக்க விடாம, சூப்பரா எடுத்துருக்காங்க.

இயக்குநர் ராம்பாலாவுக்கு கண்டிப்பா நல்லதொரு தொடக்கம். கதை, திரைக்கதையெல்லாம் ரொம்ப சூப்பர்னு சொல்ல முடியாதுன்னாலும் கண்டிப்பா ரெண்டு மணிநேரம் போரடிக்காம உக்காந்து சிரிக்கிற அளவுக்கு நல்லாதான் பண்ணிருக்காரு. எவ்வளவுதான் நம்மூர் பாணி படங்கள் எடுத்தாலும் ஆங்கிலப் படங்களோட தாக்கம் இல்லாம எடுக்க முடியாது போல. நல்லா போயிகிட்டு இருந்த படத்தோட க்ளைமாக்ஸ்ல நம்ம 'Insidious' படத்தோட சீன் ரெண்ட அப்டியே எடுத்து வச்சிருக்காய்ங்க.

மொத்தத்துல ஹீரோவா சந்தானத்துக்கு முதல் முழுமையான வெற்றி. நிச்சயம் படத்த பாத்து சிரிக்கலாம்.

-முத்து சிவா

English summary
Here is one of the readers comments for Santhanam's new release Dhillukku Thuttu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil