»   »  தில்லுக்குத் துட்டு 'காமெடி தர்பார்'..ரசிகர்கள் பாராட்டு மழை!

தில்லுக்குத் துட்டு 'காமெடி தர்பார்'..ரசிகர்கள் பாராட்டு மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் லொள்ளு சபா ராம்பாலா இயக்கத்தில், இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'தில்லுக்குத் துட்டு'.

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்' படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக சந்தானம் இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.


ஹீரோவாகத் தொடரும் ஆசையில் ஓபனிங் பாடல், சண்டைக்காட்சி என முன்னணி நடிகர்களுக்கு இணையான அம்சங்களுடன் சந்தானம் களமிறங்கிய தில்லுக்குத் துட்டு தேறியதா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? பார்க்கலாம்.


ஜோடி சூப்பர்

சந்தானம் -ஷனன்யா ஜோடிப் பொருத்தம் சூப்பர். தில்லுக்குத் துட்டு நல்ல நகைச்சுவை கலந்த ஒரு பேய்ப்படம் என சீனிவாசன் பாராட்டியிருக்கிறார்.


என்ன ஒரு படம்

தில்லுக்குத் துட்டு திரைப்படம் பார்த்து என்ஜாய் செய்தேன். நீங்களும் தியேட்டரில் சென்று பாருங்கள் என ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.


சந்தானம்

தில்லுக்குத் துட்டு நல்ல பொழுதுபோக்கு. இந்த மாதிரி வேடங்களில் சந்தானத்தால் மட்டுமே நடிக்க முடியும் என படத்தையும், சந்தானத்தையும் ஒருசேர சசிதரன் பாராட்டியிருக்கிறார்.


ஏதோ பரவால்ல

டைமிங் காமெடியால படம் ஏதோ சுமாரா போகுது என 'என்னத்த கன்னையா' போல யுவா சலித்துக் கொண்டிருக்கிறார்.


2 வது பாதி

தில்லுக்குத் துட்டு முதல் பாதியை விட 2 வது பாதி நன்றாக இருக்கிறது என ராகுல் பதிவிட்டிருக்கிறார். இதுபோல மேலும் பல ரசிகர்களும் படம் நன்றாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


மொத்தத்தில் தில்லுக்குத் துட்டு- ஒருமுறை பார்க்கலாம்.English summary
Santhanam's Dhilluku Dhuddu Released Today on Worldwide- live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil