»   »  சந்தானம் இடத்தைக் கைப்பற்றிய சிபிராஜ்!

சந்தானம் இடத்தைக் கைப்பற்றிய சிபிராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை மரணத்தால் தனது தில்லுக்கு துட்டு படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் சந்தானம் தள்ளி வைத்திருக்கிறார்.

காமெடி நடிகராகத் திரைப்பயணத்தைத் தொடங்கிய சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் தில்லுக்கு துட்டு படத்தை ஜூலை மாதம் வெளியிட முடிவு செய்திருந்தனர்.


Dhilluku Dhuddu Release date Postponed

ஆனால் எதிர்பாராதவிதமாக நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம்(69) மரணமடைந்ததால், தற்போது தில்லுக்கு துட்டு படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போயிருக்கிறது.


இதனால் அப்படத்தை வாங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதே தேதியில், சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜாக்சன் துரையை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.


இப்படத்தின் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சந்தானம் இருக்கிறார். எனினும் தந்தை இழப்பிலிருந்து இன்னும் அவர் மீளவில்லை என்பதால் தில்லுக்கு துட்டு படத்தின் வெளியீட்டுத் தேதி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

English summary
Santhanam's Dhilluku Dhuddu Release date now Postponed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil