»   »  மூன்று நாட்களில் ரூ 66 கோடியை அள்ளியது டோணி.. தமிழிலும் நல்ல வரவேற்பு!

மூன்று நாட்களில் ரூ 66 கோடியை அள்ளியது டோணி.. தமிழிலும் நல்ல வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - அன் அன்டோல்ட் ஸ்டோரி. டோணி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.

60 நாடுகளில், 4500 திரையரங்குகளில் வெளியான தோனி படம், முதல் நாளன்று ரூ. 21 கோடியை வசூலித்தது. வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் அதிக முதல் நாள் வசூல் டோணி படத்துக்குத்தான் கிடைத்துள்ளது.

Dhoni bio pic becomes superhit

சனி, ஞாயிறில் டோணி படத்தின் வசூல் இன்னும் அதிகமாகியுள்ளது. சனியன்று ரூ. 20.60 கோடியும் ஞாயிறன்று ரூ. 24.10 கோடியும் வசூலித்து சாதனை செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் மூன்று நாள்களில், ரூ. 66 கோடியை வசூலித்து நூறு கோடி ரூபாய் வசூலை நோக்கி வெற்றிநடை போடுகிறது.

தமிழகத்திலும்...

தமிழ்நாட்டிலும் தோனி படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்பதாலும் தோனி மீது ரசிகர்கள் உணர்வுபூர்வமான பந்தம் கொண்டுள்ளதால், இந்தப் படத்துக்குத் தமிழ்நாட்டிலும் ஒரு தமிழ்ப் படத்துக்கு இணையான வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது.

தமிழில் 205, ஹிந்தியில் 27 என தமிழ்நாட்டில் இந்தப் படம் 232 திரையரங்குகளில் வெளியாகி, முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 7 கோடி வசூலித்துள்ளது. மேலும் கூடுதல் திரையரங்குகளில் இந்தப் படத்தைத் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

English summary
MS Dhoni An Untold Story becomes superhit all over India and collects Rs 66 cr in first 3 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil