»   »  பிரமாண்டமாக ரிலீஸான 'டோணி': பாகிஸ்தானில் மட்டும் தடை

பிரமாண்டமாக ரிலீஸான 'டோணி': பாகிஸ்தானில் மட்டும் தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படம் 60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 தியேட்டர்களில் பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் மட்டும் டோணியின் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி 60 நாடுகளில் 4 ஆயிரத்து 500 தியேட்டர்களில் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது.

Dhoni Biopic hits screens: Banned in Pakistan

டோணியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ளார். இந்நிலையில் டோணி படத்தை திரையிட பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து 7 தீவிரவாத முகாம்கள அழித்துவிட்டு வந்துள்ளது.

இதையடுத்து தான் டோணியின் படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ தாக்குதலே நடக்கவில்லை என்று கூறி வரும் பாகிஸ்தான் டோணி படத்திற்கு தடை விதிக்கவில்லையாம் மாறாக சென்சார் போர்டு சான்றிதழ் அளிக்கவில்லை என்று புதுக் கதை கூறியுள்ளது.

இந்நிலையில் டோணி படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்துள்ளனர்.

English summary
Cool captain Dhoni's biopic has hit the screens on friday. But the movie has been banned in Pakistan after Indian army's surgical attack.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil