தோனியின் முதல் ஹீரோ ஹரிஷ் கல்யாண்… தனுஷ் பட ஹீரோயினுக்கு அடித்த ஜாக்பாட்
சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி தமிழில் படங்களை தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தோனி தயாரிக்கும் முதல் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்காக ரமேஷ் தமிழ்மணி இயக்கும் படத்தின் ஹீரோ, ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அசீம் விளையாடினது போதும் வாங்க வண்டியில ஏறுங்க.. பறக்கும் மனநல மருத்துவமனை மீம்!'

தோனி எண்டர்டெயின்மென்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் மிகப் பெரிய சொத்தாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தோனி. ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிய தோனிக்கு, தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, தமிழில் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை தொடங்கியுள்ள தோனி, முதல் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளவுள்ளதாகவும் அறிவித்துவிட்டார்.

விரைவில் ஷூட்டிங்
'அதர்வா தி ஆர்ஜின்' என்ற அனிமேஷன் படம் மூலம் கவனம் ஈர்த்த ரமேஷ் தமிழ்மணியிடம் தோனியின் மனைவி சாக்ஷி சிங் ஒன்லைன் ஒன்றை கூறியுள்ளார். அதை டெவலப் பண்ணி திரக்கதையாக எழுதியுள்ள ரமேஷ் தமிழ்மணி, இது ஃபேமிலி என்டர்டெயினர். ஜானரில் ஃபீல் குட் படமா இருக்கும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், டெக்னிக்கல் டீம் போன்றவற்றை இறுதிசெய்யும் முடிவில் படக்குழு தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், விரைவில் படப்பிடிப்பையும் தொடங்கவுள்ளனராம்.
ஹீரோவாகும் ஹரிஷ் கல்யாண்
தோனியின் முதல் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பியார் பிரேமா காதல், தாராள பிரபு, ஓமணப் பெண்ணே போன்ற படங்கள் மூலம் இளம் ஹீரோவாக கலக்கிவரும் ஹரிஷ் கல்யாண், தோனி தயாரிப்பில் நடிக்கவுள்ளது திரையுலகினர் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், தோனியின் தயாரிப்பில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளது கல்யாணப் பரிசாக அமைந்துள்ளது என ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகின்றனர்.

நாயகியுடன் பேச்சுவார்த்தை
இந்நிலையில், இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். சிவகார்த்திகேயுடன் டாக்டர், டான், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படங்களில் நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகன், இப்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தோனியின் தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரியங்கா மோகனுக்கு வாய்ப்பு தேடிப் போயுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











