சென்னை: தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடுத்து தனக்கு சூர்யாவை பிடிக்கும் என்று கிரிக்கெட் வீரர் டோணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியை காண கூல் கேப்டன் டோணி ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழ் சினிமாவில் உங்களுக்கு எந்தெந்த நடிகர்களை பிடிக்கும் என்று டோணியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,
தமிழ் சினிமாவில் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும். அவரை அடுத்து சூர்யாவை பிடிக்கும். அவர் நடித்த சிங்கம் படத்தை சப்டைட்டிலுடன் பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார்.
இந்நிலையில் 'தல' டோணியே எங்க சிங்கத்தை பிடிக்கும் என கூறிவிட்டார் என சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெருமையாக தெரிவித்து வருகிறார்கள்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.