»   »  ஹாக்கி ஜாம்பவான் படம் மூலம் தயாரிப்பாளர் ஆகும் 'தல'

ஹாக்கி ஜாம்பவான் படம் மூலம் தயாரிப்பாளர் ஆகும் 'தல'

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் டோணி பாலிவுட் படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்தின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படும் என்று பாலிவுட் இய்ககுனர் கரண் ஜோஹார் கடந்த ஆண்டு அறிவித்தார்.

Dhoni to produce a movie?

அறிவிப்பு அறிவிப்பாகவே இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை ரோஹித் வைத் இயக்க உள்ளார். பத்ரிநாத் கி துல்ஹனியா ஹிட் படத்தை கொடுத்த வருண் தவான் தியான் சந்தாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தை எடுக்கும் உரிமையை கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி வாங்கியுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தை டோணி தயாரிக்க உள்ளாராம்.

அவருடன் சேர்ந்து கரண் ஜோஹாரும் தயாரிக்கலாம் என்று தெரிகிறது. வாவ், கிரிக்கெட் உலகில் இருந்து சினிமா உலகிற்கு செல்கிறார் டோணி.

English summary
According to reports, cricketer Mahendra Singh Dhoni is going to produce hockey legend Dhyan Chand's biopic.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil