»   »  பப்ளிசிட்டி: தனுஷையே தூக்கி சாப்பிட்ட 'தல' டோணி

பப்ளிசிட்டி: தனுஷையே தூக்கி சாப்பிட்ட 'தல' டோணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி தனது வாழ்க்கை பற்றிய படத்தை சிறப்பான முறையில் விளம்பரம் செய்து வருகிறார்.

கூல் கேப்டன் டோணியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி. படத்தில் டோணியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரை பயன்படுத்தி விளம்பரம் தேடுவது டிரெண்டாக உள்ளது.

ரா ஒன்

ரா ஒன்

2011ம் ஆண்டு வெளியான ரா ஒன் படத்தில் ஒரேயொரு காட்சியில் ரஜினிகாந்த் எந்திரன் படத்தில் வரும் சிட்டி கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். இதன் மூலம் படத்திற்கு விளம்பரம் தேடினார் ஷாருக்கான்.

சென்னை எக்ஸ்பிரஸ்

சென்னை எக்ஸ்பிரஸ்

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் என்ற பாடலை வைத்து அதை ரஜினிக்கு அர்ப்பணித்து விளம்பரம் தேடினார்கள்.

ருஸ்தம்

ருஸ்தம்

அக்ஷய் குமார் நடிப்பில் அண்மையில் வெளியான ருஸ்தம் படத்திற்கு ரஜினி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம் ருஸ்தமுக்கு இலவசமாக விளம்பரம் கிடைத்தது.

டோணி

டோணி

சூப்பர் ஸ்டாருக்கு இருக்கும் கிரேஸை புரிந்து கொண்ட டோணி சுஷாந்துடன் சென்னை வந்து ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். யாரை பிடித்தால் வேலை நடக்கும், விளம்பரம் கிடைக்கும் என டோணி நன்றாக தெரிந்து வைத்துள்ளார்.

English summary
Cool Captain Dhoni is very careful when it comes to promoting his upcoming biopic.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil