»   »  வசூலில் சிக்ஸர் சிக்ஸராக அடிக்கும் டோணி படம்: 2 நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா?

வசூலில் சிக்ஸர் சிக்ஸராக அடிக்கும் டோணி படம்: 2 நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ.21.30 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி கடந்த வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக வெளியானது. சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடித்துள்ளார்.

படம் ரிலீஸான அன்றே வசூலில் சாதனை படைத்துள்ளது.

ரூ.21.30

ரூ.21.30

டோணி படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 21.30 கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டு வெளியான படங்களில் சல்மான் கானின் சுல்தான் படம் தான் ரிலீஸான அன்றே அதிகபட்சமாக ரூ.36.54 கோடி வசூல் செய்தது.

டோணி

டோணி

சுல்தான் படத்தை அடுத்து ரிலீஸான அன்றே அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை டோணி படம் பெற்றுள்ளது. படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் டோணியாக நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சனிக்கிழமை

சனிக்கிழமை

டோணி படம் வெள்ளிக்கிழமை ரூ.21.30 கோடியும், சனிக்கிழமை ரூ.20.60 கோடியும் வசூலித்துள்ளது. படம் ரிலீஸான இரண்டே நாட்களில் ரூ.41.90 கோடி வசூலாகியுள்ளது. இன்றைய வசூலையும் சேர்த்தால் ரூ.60 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

டோணி படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அல்லாடுகிறார். இதே நிலை தொடர்ந்தால் படம் ரூ. 500 கோடியை வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
After Salman Khan's Sultan, MS Dhoni: The Untold Story has become the highest opener of 2016.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil