»   »  'டோணி' பட ட்ரெய்லரை பார்த்து பார்த்து அழும் கூல் கேப்டனின் தந்தை

'டோணி' பட ட்ரெய்லரை பார்த்து பார்த்து அழும் கூல் கேப்டனின் தந்தை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: கூல் கேப்டன் டோணியை பற்றி எடுக்கப்பட்டுள்ள படத்தின் ட்ரெய்லரை டிவியில் பார்க்கும்போது எல்லாம் அவரின் தந்தை கண் கலங்குகிறாராம்.

ரயிலில் டிக்கெட் கலெக்டராக இருந்த டோணி இன்று நாடே கொண்டாடும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இந்நிலையில் டோணியின் வாழ்க்கை வரலாறு எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் இந்தியில் படமாக்கப்பட்டுள்ளது.

நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இந்த படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது.

ரஜினி

ரஜினி

டோணி தன்னைப் பற்றிய படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்த டோணி தனக்கு பிடித்த கோலிவுட் ஹீரோவான ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.

தந்தை கண்ணீர்

தந்தை கண்ணீர்

டோணி படத்தின் ட்ரெய்லரை டிவியில் பார்க்கும்போது எல்லாம் அவரது தந்தை பான் சிங் ரொம்ப ஃபீல் பண்ணி கண் கலங்குகிறாராம். என் மகன் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தான் என டோணி கடந்து வந்த பாதையை நினைத்து கண்ணீர்விடுகிறாராம்.

சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங்

டோணியாக நடித்துள்ள சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நடிப்பு டோணியின் குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்துள்ளதாம். இந்த பையன் நம்ம டோணி மாதிரியே என்னம்மா நடித்திருக்கிறார் என்று பாராட்டினார்களாம்.

பயிற்சி

பயிற்சி

டோணியாக நடிக்க சுஷாந்த் சிங் ராஜ்புட் 9 மாதங்கள் கிரிக்கெட் விளையாட பயிற்சி எடுத்தாராம். டோணி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த நம்ம தல பிரமித்துவிட்டாராம்.

English summary
Dhoni's father Pan Singh gets emotional every time he watches the trailer of his son's biopic on television.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil