»   »  மனைவியுடன் டோணி படம் பார்த்த 'தல': சாக்ஷி என்ன சொன்னாரோ?

மனைவியுடன் டோணி படம் பார்த்த 'தல': சாக்ஷி என்ன சொன்னாரோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டோணி தன் வாழ்க்கை வரலாற்று படத்தை தியேட்டரில் தனது மனைவி சாக்ஷியுடன் பார்த்து ரசித்தார்.

Dhoni watches MS Dhoni The Untold story with wife Sakshi

கிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படமான எம்.எஸ். டோணி: தி அன்டோல்ட் ஸ்டோரி இன்று ரிலீஸாகியுள்ளது. டோணி படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

தமிழகத்திலும் டோணி படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டமாக உள்ளது. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இந்த படத்தை டோணி தனது மனைவி சாக்ஷியுடன் சேர்ந்து தியேட்டரில் பார்த்து ரசித்தார்.

தியேட்டருக்கு வந்த அவரது உடை மற்றும் கம்பீரத்தை பார்த்தால் ராணுவ வீரர் போன்று இருந்தது. படத்தை பார்க்க செல்லும் முன்பு சிரித்த முகமாக இருந்தார் டோணி.

படத்தை பார்த்த பிறகு வெளியே வந்த அவர் முகத்தில் ஒரே ஃபிலீங்ஸாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் டோணியின் முன்னாள் காதலி பற்றி தெரிவித்துள்ளனர். சாக்ஷி படத்தை பார்த்துவிட்டு என்ன சொன்னாரோ தெரியவில்லை.

English summary
Cricketer Dhoni has watched his biopic in theatre with wife Sakshi Singh.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil