twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூம் 3 வசூல் ரூ 300 கோடியைத் தாண்டியது... க்ரிஷ், சென்னை எக்ஸ்பிரசை முந்தியது!

    By Shankar
    |

    ஆமீர் கான் நடித்த தூம் 3 படத்தின் வசூல் இந்திப் படங்களின் அனைத்து வசூலையும் முறியடித்துள்ளது.

    முதல் வார முடிவில் இந்தப் படம் ரூ 300 கோடியை உலகெங்கும் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது.

    செவ்வாய்க்கிழமை வரை ரூ 244 கோடியை வசூலித்த இந்தப் படம், கிறிஸ்துமஸ் மற்றும் அதற்கடுத்த நாளில் மட்டும் ரூ 60 கோடிக்கு மேல் குவித்து புது சாதனை படைத்துள்ளது.

    இதுவரை முதல்வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள படங்களாக '3 இடியட்ஸ்', 'ஏக் தா டைகர்', 'சென்னை எக்ஸ்பிரஸ்' மற்றும் 'கிரிஷ்-3'-தான் இருந்தன.

    இவற்றுள் 'கிரிஷ்-3' திரையிடப்பட்ட நான்காவது நாளில் 100 கோடியைத் தொட்டது. ஆனால் 'தூம்-3' மூன்றாவது நாளிலேயே ரூ 102 கோடியைத் தாண்டியது.

    ரூ 300 கோடி

    ரூ 300 கோடி

    ரூ 100 கோடி செலவில் உருவான இந்தப் படம் திரையிடப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே ரூ.300 கோடியைக் குவித்துள்ளது இந்தியத் திரையுலகை வியக்க வைத்துள்ளது.

    தமிழகத்தில்...

    தமிழகத்தில்...

    தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. தமிழில் டப் செய்யப்பட்டு வரும் முதல் ஆமீர்கான் படம் இதுவே. அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழ் - தெலுங்கில் மட்டும் இந்தப் படம் முதல் வாரத்தில் 12 கோடியைக் குவித்துள்ளது. ஒரு நேரடி தமிழ்ப் படத்துக்குக் கூட இவ்வளவு வசூல் கிடைப்பதில்லை இன்றைக்கு.

    நேபாளத்தில்...

    நேபாளத்தில்...

    நேபாளத்தில் இந்தியில் வெளியான தூம் 3-க்கு இதுவரை காணாத வரவேற்பு. தூம் 3-வெளியாவதால், அந்த நேபாள மொழிப் படங்களை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

    பாகிஸ்தானில்...

    பாகிஸ்தானில்...

    பாகிஸ்தானில் சமீபத்தில் இந்தியப் படங்களுக்கு சென்சார் சான்றிதழ் அளிக்கக்கூடாது என்ற உத்தரவுகளைத் தாண்டி இந்தப் படம் வெளியானது. கராச்சியில் மட்டும் 20 மில்லியன் வசூல் செய்துள்ள இப்படம் சென்ற மாதம் அங்கு திரையிடப்பட்ட 'வார்' படத்தின் சாதனையையும் முறியடித்துள்ளது.

    English summary
    Bollywood icon Aamir Khan's latest release 'Dhoom 3', which has been breaking box office collections records day after day since its release on Friday, has bagged Rs 300 crore worldwide.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X