»   »  பாகுபலி நாயகன் பிரபாஸ்... தூம் 4 வில்லனாக மாறுகிறாரா?

பாகுபலி நாயகன் பிரபாஸ்... தூம் 4 வில்லனாக மாறுகிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தூம் 4 படத்தில் கதாநாயகனாக பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கவிருக்கிறார் என்றும், இதன் மூலம் அவர் பாலிவுட்டில் என்ட்ரி ஆகிறார் என்றும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தூம் படங்களின் 3 பாகங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது 4 வது பாகத்தை எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முதல் 3 பாகங்களில் முறையே ஜான் ஆப்ரகாம், ஹிருத்திக்ரோஷன், அமீர்கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தற்போது எடுக்கப் போகும் அடுத்த பாகத்தில் கதாநாயகன் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தூம் - தூம் 3

தூம் - தூம் 3

தூம், தூம் 2, தூம் 3 ஆகிய படங்களில் முறையே ஜான் ஆப்ரகாம், ஹிருத்திக்ரோஷன், அமீர்கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 3 பாகங்களுமே வசூலில் நன்கு கல்லா கட்டின. தொடர்ந்து 4 வது பாகத்தை படக்குழுவினர் தற்போது எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சல்மான் தொடங்கி ஷாரூக் வரை

சல்மான் தொடங்கி ஷாரூக் வரை

முதலில் ஷாரூக் நடிப்பார் என்றும் பின்னர் சல்மான் கான் பொருத்தமாக இருப்பார் என்றும், படக்குழுவினர் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த பாகத்தில் ஹிருத்திக்ரோஷன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள் என்றும் கூறினர்.

பிரபாஸ்

பிரபாஸ்

தற்போது இந்த 4 வது பாகத்தில் பிரபாஸ் நடிக்கவிருக்கிறார் என்று புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாகுபலி படம் பிரபாஸிற்கு நல்ல ஒரு வரவேற்பை உலகம் முழுவதும் பெற்றுத் தந்தது, தெலுங்கு தவிர்த்து பாலிவுட்டில் அவரை நடிக்க வைக்கவும் தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இவற்றையெல்லாம் விட பிரபாஸ் பாலிவுட்டில் கால் பதிக்க தக்க தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

பாகுபலியை பார்த்த படக்குழுவினர்

பாகுபலியை பார்த்த படக்குழுவினர்

சமீபத்தில் தூம் படத்தை இயக்கப் போகும் விஜய் கிருஷ்ணா ஆச்சர்யா, ஆதித்யா சோப்ரா மற்றும் படக்குழுவினர் பாகுபலி படத்தை முழுவதுமாக பார்த்திருக்கின்றனர். படத்தின் ஹிந்திப் பதிப்பில் பிரபாஸின் நடிப்பு மற்றும் வசூல் ஆகியவை அவர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தூம் 4 ல் பிரபாசை நடிக்க வைக்கலாம் என்று ஒரு மனதாக முடிவெடுத்திருக்கின்றனர்.

ஹிருத்திக்ரோஷன்

ஹிருத்திக்ரோஷன்

தூம் 4 ல் நடிக்க பிரபாஸ் பொருத்தமாக இருப்பார் என்று நம்பும் படக்குழுவினர், விரைவில் இது தொடர்பான முறையான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறியிருக்கின்றனர். தூம் 2 வில் நடித்து அனைவரையும் கவர்ந்த ஹிருத்திக்ரோஷன் இந்தப் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

English summary
Baahubali Fame Prabhas will make his grand Bollywood debut with Dhoom 4. Sources Said "The makers will soon make an announcement, once they have finalized the details".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil