Don't Miss!
- News
"உதிரும் இலைகள்"... ப்ளானே இதான்.. பட்ட பாடெல்லாம் வீணா.. பாஜக ஆதரவு யாருக்கு தெரியுமா.. கசிந்த தகவல்
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Lifestyle
தம்பதிகளே! உங்க உறவில் நம்பிக்கையையும் நெருக்கத்தையும் உருவாக்க நீங்க என்ன பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Finance
சீனாவை ஆட்டி படைத்த சவால்கள்.. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு.. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கவலை!
- Sports
சூர்யகுமாரின் பலவீனம் இதுதான்.. அதை சரி செய்தே தீர வேண்டும்.. தினேஷ் கார்த்திக் அட்வைஸ்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
“தூம் தாம் தோஸ்தான்”… நானி ரசிகர்களுக்காக சந்தோஷ் நாராயணன் கொடுத்த தர லோக்கல் தசரா சிங்கிள்
ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகர் நானி இப்போது 'தசரா' படத்தில் நடித்து வருகிறார்.
தசரா படத்தில் நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
அதிக எதிர்பார்ப்பில் உள்ள நானியின் தசரா படத்தில் இருந்து மரண மாஸ் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்க்கும் நானி.. காரணம் என்னன்னு அவரே சொல்லியிருக்காரு!

ஹாட்ரிக் ஹிட்
தெலுங்கு திரையுலகின் நேச்சுரல் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் நானி, இப்போது 'தசரா' படத்தில் நடித்து வருகிறார். நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான 'டக் ஜெகதீஷ்', 'ஷ்யாம் சிங்கா ராய்', 'அன்டே சுந்தராகினி' படங்கள் ஹாட்ரிக் ஹிட் அடித்து அசத்தின. நானியின் படங்களுக்கு எப்போதுமே ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், அவரது படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். வித்தியாசமான ஜானர்களில் புதிய கதைகளில் நடித்து வருகிறார் நானி.

கீர்த்தி சுரேஷுடன் ஜோடி
ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நானியுடன் சாய் பல்லவி, கிருத்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல், கடைசியாக வெளியான நானியின் படமான 'அண்டே சுந்தராகினி' ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகி இருந்தது. நானியுடன் நஸ்ரியா ஜோடியாக நடித்திருந்த இந்தப் படம், தெலுங்கு உட்பட தமிழ், மலையாளம் மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நானியின் 'தசரா' படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.

தூம் தாம் தோஸ்தான்
தசரா திரைப்படத்தில் நானி மிக வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் ஜானரில் செம்ம லோக்கலாக உருவாகும் இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். ரயில்வே நிலக்கரி சுரங்க கதைக்களத்தின் பின்னணியில் இந்தப் படம் உருவாகிறது. கேஜிஎஃப் படத்தின் கலர் டோன் எப்படி இருந்ததோ, அதேபோல் தசரா படத்தை இயக்கி வருகிறார் ஸ்ரீகாந்த் ஒடேலா. இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. 'தூம் தாம் தோஸ்தான்' என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடல் டோலிவுட் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தசரா படத்தில் இருந்து முதல் பாடலை வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

சந்தோஷ் நாராயணனின் தர லோக்கல்
சந்தோஷ் நாராயணன் இசையில் மரண மாஸ் காட்டும் தர லோக்கல் பாடலாக உருவாகியுள்ளது 'தூம் தாம் தோஸ்தான்' நானியின் வெறித்தனமான ஆட்டமும், பாடலின் மேக்கிங்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்ட சந்தோஷ் நாராயணனுக்கு தெலுங்கில் தசரா படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தசரா படம் விரைவில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், இதுவரை கீர்த்தி சுரேஷின் போஸ்டர் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.