»   »  இந்தியில் சோலோவாக வெளியாகும் த்ரிஷ்யம்... வெற்றி தொடருமா?

இந்தியில் சோலோவாக வெளியாகும் த்ரிஷ்யம்... வெற்றி தொடருமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் பெரும் வெற்றியை ஈட்டிய த்ரிஷ்யம் படம், கடைசியாக இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகிறது.

இன்று போட்டிக்கு எந்தப் படமும் இல்லாமல் இந்தியில் சோலோவாக வெளியாகியுள்ள த்ரிஷ்யத்தின் வெற்றி தொடருமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.

மலையாள ஒரிஜினல்

மலையாள ஒரிஜினல்

மலையாளத்தில் மோகன் லால், மீனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்த படம் 'த்ரிஷ்யம்'. இதன் வெற்றியைத் தொடர்ந்து கன்னடத்தில் 'த்ரிஷ்யா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. பி வாசு இயக்கி, இளையராஜா இசையமைத்திருந்தார்.

தெலுங்கில்

தெலுங்கில்

அடுத்து நடிகர் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தெலுங்கில் 'த்ருஷ்யம்' என்ற பெயரில் வெளியிடப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதனை ஸ்ரீப்ரியா இயக்கி தயாரித்திருந்தார்.

பாபநாசம்

பாபநாசம்

இப்படம் கமல் - கவுதமி நடிக்க தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் சமீபத்தில் வெளிவந்தது. மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்கியிருந்தார். திரைக்கதையில் சின்னச் சின்ன மாற்றங்களுடன் வெளியிடப்பட்ட இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றிப் படம்.

இந்தியில்

இந்தியில்

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வென்ற இந்தப் படம் அடுத்து இந்தியில் ரீமேக் ஆகியுள்ளது. பிரபல நடிகர் அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தனியாக

தனியாக

போட்டிக்கு வேறு படங்களே இல்லாத சூழலில் தனியாக இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக சிறப்புக் காட்சியில் படத்தை பார்த்த விமர்சகர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனற். எனவே இந்தியில் இந்தப் படம் பெரும் வெற்றிப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
The Hindi version of Malayalam original Dhrishyam is releasing in the same title today.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil