»   »  தமிழ், இந்தியில் வெளியாகவிருக்கும் த்ரிஷ்யம் ரீமேக்!

தமிழ், இந்தியில் வெளியாகவிருக்கும் த்ரிஷ்யம் ரீமேக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாள வெற்றிப் படமான த்ரிஷ்யம் படத்தின் தமிழ் மற்றும் இந்தி ரீமேக்குகள் விரைவில் வெளியாகவுள்ளன.

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த ‘திரிஷ்யம்' மலையாள படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.


தெலுங்கில்

தெலுங்கில்

இதையடுத்து இப்படம் பிறமொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் த்ரிஷ்யா என்ற பெயரில் வெங்கடேஷ் - மீனா ஜோடியாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது.


கன்னடத்தில்

கன்னடத்தில்

கன்னடத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் நடி%E

தமிழில்

தமிழில்

தற்போது தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. தமிழில் இதற்கு பாபநாசம் என பெயரிடப்பட்டு உள்ளது. கமல், கவுதமி ஜோடியாக நடித்துள்ளனர்.


இந்தியில்

இந்தியில்

இந்தியில் அஜய் தேவ்கான், ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளனர். அங்கு இப்படத்துக்கு ‘த்ரிஷ்யம்' என பெயர் வைத்துள்ளனர். படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.


ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

பாபநாசம் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.


பாபநாசம் படம் ரிலீசாகும் தேதி இன்னும் முடிவாகவில்லை. இரண்டு படமும் ஒரே நேரத்தில் மோதலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தி த்ரிஷ்யத்துக்கு முன்னதாகவே பாபநாசம் படத்தை ரிலீஸ் செய்யலாமா என்றும், யோசிக்கப்படுகிறது.English summary
The Tamil and Hindi remakes of Malayalam super hit Dhrishyam will be released in coming July simultaneously.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil