Bison Day 1 Box Office - துருவ் விக்ரமுக்கு கை கொடுத்ததா பைசன் காளமாடன்?.. முதல் நாள் வசூல் டல் அடிக்குதே
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் காளமாடன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். மேலும் பசுபதி, ரஜிஷா, மதன், லால், அமீர் என பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. இந்நிலையில் பைசன் திரைப்படம் முதல் நாள் வசூலில் கொஞ்சம் டல் அடித்திருப்பதாகவே தெரிகிறது.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை எடுத்திருக்கிறார். இதற்கு முன்னர் மாரி இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட். அதேபோல் விக்ரமின் மகனுக்கும் திரைத்துறையில் பெரிய திருப்புமுனை தேவைப்பட்டது. இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்திருப்பதால் படம் பற்றிய ஹைப் அனைவரிடமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ரிலீஸ்: கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இந்தப் படத்துக்காக துருவ் விக்ரம் காத்திருந்தார். கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவான படம் என்பதால் அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனிடம் பயிற்சியும் எடுத்தார். இப்படி கடுமையாக இந்தப் படத்தில் அவர் உழைத்திருந்தார். படமானது நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. ரசிகர்களும் தங்களுக்குள்ள எதிர்பார்ப்போடு படம் பார்க்க சென்றார்கள்.

படம் ஓகேதான்: முந்தைய படங்கள் போல் இதிலும் மாரி செல்வராஜ் கண்டிப்பாக சம்பவங்கள் செய்திருப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமில்லை. சாதிய கொடுமைகளை தனது படைப்புகளில் தவறாமல் பேசும் அவர் இந்தப் படத்தில் மாறுபட்ட கோணத்தில் பேசியிருந்தது ரசிக்கும்படியாகவே இருந்தது. இருப்பினும் பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்தான் என்பது ரசிகர்களில் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
துருவ் விக்ரம் அசத்திட்டார்: அதையெல்லாம் தாண்டி துருவ் விக்ரமை படம் பார்த்த அனைவருமே பாராட்டிவருகிறார்கள். படம் முழுக்க அவ்வளவு உழைப்பை கொட்டியிருக்கிறார். இரண்டு வருடங்கள் இந்தப் படத்துக்காக கடுமையாக உழைத்ததற்கும், காத்திருந்ததற்கும் நல்ல ரெஸ்பான்ஸ் அவருக்கு கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக அவர் வருவார் என்பதை பைசன் திரைப்படம் உணர்த்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
வசூல் எப்படி?: விமர்சன ரீதியாக படம் கொண்டாடப்பட்டாலும், வசூலில் கொஞ்சம் டல் அடித்திருப்பதாகவே தெரிகிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி முதல் நாளான நேற்று பைசன் காளமாடன் திரைப்படம் மொத்தம் இந்தியாவில் 2.50 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. போட்டிக்கு பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் வந்ததுதான் இந்த டல் வசூலுக்கு காரணமாக இருக்கும்; போகப்போக கண்டிப்பாக இந்தப் படம் வசூலில் பிக்கப் ஆகிவிடும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கூற ஆரம்பித்திருக்கின்றன. அதேசமயம் துருவ் விக்ரமின் மார்க்கெட்டுக்கு முதல் நாள் வசூல் 2.50 கோடி என்பது பாசிட்டிவ்வான ஒன்றுதான் என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











