Dhruv Vikram: பைசன் தான் முதல் படம்.. பெரிய சம்பவம் இருக்கு.. துருவ் விக்ரம் என்னங்க இப்படி சொல்றாரு!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பைசன். இந்த படம் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படம். இந்த படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு நிவாஸ்.கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்திற்கான புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோசன் நிகழ்ச்சி ஒன்றில் துருவ் விக்ரம் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக அவர் பைசன் படத்தை தனது முதல் படம் என்று தெரிவித்துள்ளார்.

சம்பவம்: அவர் பேசுகையில், " நான் இதற்கு முன்னர் இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இந்த இரண்டு படங்களையும் நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. அதைப் பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் இந்த படத்தை வந்து பாருங்கள். இந்தப் படம் தான் எனது முதல் படம். இந்த படத்திற்காக நான் மட்டும் அல்ல, என்னுடன் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட அனைவரும் 100 சதவீத உழைப்பை போட்டுள்ளார்கள். மேலும் ஒட்டுமொத்த படக்குழுவும் 100 சதவீத உழைப்பை போட்டுள்ளார்கள். நானும் 100 சதவீத உழைப்பை போட்டுள்ளேன் என்று நம்புகிறேன். நீங்கள் படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள். இந்த படத்தில் எனது இயக்குநர் மாரி செல்வராஜ் இறங்கி ஒரு தரமான சம்பவம் ஒன்றை செய்துள்ளார்.

Dhruv Vikram Appreciates Mari Selvaraj For Bison Film
Photo Credit:

படத்திற்கு இப்படி போங்க: இந்த படத்திற்கு குடும்பத்துடன், நண்பர்களுடன், காதலன், காதலியுடன் கட்டாயம் சென்று படத்தை பாருங்கள்" என்று பேசி உள்ளார். துருவ் விக்ரம் இவ்வாறு பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. துருவ் விக்ரம் இதற்கு முன்னர் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் படமான ஆதித்ய வர்மா படத்தில் அறிமுகம் ஆனார். அதேபோல், விக்ரம் உடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார். அதன் பின்னர் இவர் கமிட் ஆன படம் தான் பைசன்.

நம்பிக்கை: இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார் என்று தகவல் வெளியானதும் பலருக்கும் படத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இது மட்டும் இல்லாமல் நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது என்றதும் தரமான சம்பவம் உறுதி என்று ரசிகர்கள் பேசிக்கொண்டனர். படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்நிலையில் படத்தின் புரோமோசனில் துருவ் விக்ரம் இவ்வாறு பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X