Bison Twitter Review: பைசன் டிவிட்டர் விமர்சனம்.. துருவ் விக்ரமின் பைசன் பிளாக்பஸ்டரா? ஃபிளாப்பா?

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர், லால் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பைசன். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியானபோதே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் படம் பார்த்தவர்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தங்களது விமர்சனங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Dhruv Vikram Mari Selvaraj Combo Bison Kaalamaadan Twitter Review Netizens Appreciates Whole Team Asspecaily Dhruv And Pasupathy Acting

ரசிகர் ஒருவர், " பைசன் படத்தை தீபாவளி வின்னர் என்றே அறிவிக்கலாம். அட்டகாசமான நடிப்பு, உயிரோட்டமான இசை என மொத்த படமும் நன்றாக உள்ளது, 2025 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று. மாரி செல்வராஜ் மீண்டும் தனது அரசியலை, சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வை கபடியில் இருந்து பேசியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் மற்றொரு ரசிகர், " அட்டகாசமான முதல் பாதி, அதற்கு இணையான இரண்டாம் பாதி என மொத்த படமும் பிரமாதம். துருவ் விக்ரம் பிரமிப்பூட்டும் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த கதாபாத்திரம் அவரது காலத்திற்கும் நின்னு பேசும். படத்திற்கு உயிரோட்டமான இசையை கொடுத்துள்ளார் நிவாஸ். பசுபதி மீண்டும் மீண்டும் நடிப்பில் தான் ஒரு லெஜன்ட் என்பதை நிரூபித்துள்ளார். இரண்டாம் பாதியில் லால் மற்றும் அமீரின் நடிப்பு பலம் சேர்க்கிறது. தென் தமிழ்நாட்டு மக்கள் இந்த படத்தில் தங்களை ரொம்பவும் பொருத்திப் பார்ப்பார்கள். தென் தமிழகத்தில் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தரமான படம்" என்று பதிவிட்டுள்ளார்.

Dhruv Vikram Mari Selvaraj Combo Bison Kaalamaadan Twitter Review Netizens Appreciates Whole Team Asspecaily Dhruv And Pasupathy Acting

தீபாவளி ஹிட்: அதேபோல் இன்னொரு இணைய வாசி, " பைசன் படம் பிளாக்பஸ்டர். சந்தேகமே வேண்டாம் இந்த தீபாவளியில் வெற்றியை எட்டும் படமாக இது இருக்கும். துருவ் விக்ரமின் மிரட்டலான நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது. அதேபோல், 2025ஆம் ஆண்டின் தரமான படம். தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் என்பதை மாரி செல்வராஜ் மீண்டும் நிரூபித்துள்ளார்" என்று பகிர்ந்துள்ளார்.

துருவின் நடிப்பு: "தமிழ் சினிமாவின் இயக்குநர்களின் நடிகர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் துருவ் விக்ரம். அவரது திறமையும் அர்ப்பணிப்பும் பிரமிப்பூட்டுகிறது. பசுபதி, லால்,அமீர், ரஜிஷா என அனைவரது நடிப்பும் ஈர்க்கிறது. கபடியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், பல திறமையான இளைஞர்கள், இங்கு நடக்கும் சாதிய அரசியலால் எப்படி எல்லாம் இன்னல்களை எதிர் கொள்கிறார்கள் என்பது குறித்து பேசுகிறது. பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்துகிறது. மாரி செல்வராஜ் தனது தனித்துவமான கதை சொல்லல் மூலம் மீண்டும் வென்றுள்ளார்" என்று இணையவாசி ஒருவர் விமர்சித்துள்ளார்.

Dhruv Vikram Mari Selvaraj Combo Bison Kaalamaadan Twitter Review Netizens Appreciates Whole Team Asspecaily Dhruv And Pasupathy Acting

சிறந்த படைப்பு: மற்றொருவர், " மாரி செல்வராஜின் சிறந்த படைப்பு இது. நம்பமுடியாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் துருவ் விக்ரம். நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களும் பின்னணி இசையும் கவர்கிறது, சில நேரங்களில் உருக வைக்கிறது. பசுபதி, லால் மற்றும் அமீர் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்காக உச்சபட்ச நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். 2025ஆம் ஆண்டின் தலைசிறந்த படம் என்று சொல்வதற்கான அனைத்து தகுதிகளையும் பைசன் கொண்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார். படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனங்கள் படக்குழுவினருக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X