Bison Day 4 Box Office - நாளுக்கு நாள் எகிறும் பைசன் கலெக்‌ஷன்.. 4வது நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் தமிழ்நாட்டி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. போட்டிக்கு களமிறங்கிய டியூட் திரைப்படம் டஃப் கொடுத்தாலும்; பைசன் படம் தனக்கான இடத்தை தேடி எடுத்துக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நான்காவது நாளான நேற்று படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டில் தனது தந்தை போலவே பெரிய நடிகராக மாறிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திரைத்துறைக்கு வந்த துருவ்வுக்கு முதல் இரண்டு படங்கள் கை கொடுக்கவில்லை. அதுவும் முதல் படம் பெரிய சோதனையைத்தான் கொடுத்தது. முதலில் பாலா இயக்க; அது சரியில்லை என்று மற்றொருவர் இயக்க; கடைசியில் அந்தப் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. இரண்டாவது படமான மகானும் விக்ரம் பட லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது.

பைசன் காளமாடன்: மூன்றாவதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் - காளமாடன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் துருவ். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையையும், தனது புனைவையும் சேர்த்து இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க பசுபதி, அமீர், லால், ரஜிஷா, அனுபமா என பலர் நடித்திருக்கிறார்கள். கடந்த 17ஆம் தேதி படம் ரிலீஸானது.

Dhruv Vikram s Bison Kalamaadan 4th Day Box Office Collection Mari Selvaraj s Film Turns Super Hit in Tamil Nadu
Photo Credit:

மிகப்பெரிய வரவேற்பு: மாரியின் படங்கள் என்றாலே ரசிகரக்ளுக்கு எதிர்பார்ப்பு எகிறிவிடுவது வழக்கம். அப்படித்தான் இந்தப் படத்துக்கும் இருந்தது. படம் பார்த்தவர்கள் முழு திருப்தியோடு தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள். இயக்குநரின் மேக்கிங், கதை சொன்ன விதம், கேமரா, இசை என அத்தனை ஏரியாக்களிலும் பைசன் சீறி பாய்ந்ததால் தீபாவளி ரேஸில் வெற்றி பெற்றுவிட்டது படம்.

துருவ்வுக்கு பாராட்டு: முக்கியமாக துருவ் விக்ரமின் நடிப்புக்கு அப்ளாஸை அள்ளி கொடுத்தார்கள். அந்த அளவுக்கு கடுமையான உழைப்பை கொட்டியிருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதுபோல்தான் ஒவ்வொரு ஃப்ரேமிலும் துருவ் இருந்தார். இது ஒருபக்கம் இருக்க வசூலிலும் படம் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்திருக்கிறது. முதல் நாளில் கொஞ்சம் டல்லடித்த வசூல் அடுத்தடுத்த நாட்களில் பிக்கப்பாகிவிட்டது.

நான்காவது நாள் வசூல்: முதல் மூன்று நாட்களில் முறையே 2.7 கோடி, 3.4 கோடி, 4.5 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறிய Sacnilk இணையதளம் நான்காவது நாளான நேற்று 5.65 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. அந்த தளத்தின் கணக்குபடி பார்த்தால் இந்தியாவில் நான்கு நாட்களில் பைசன் மொத்தம் 16.25 கோடி ரூபாயை பாக்ஸ் ஆஃபிஸில் அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X