துருவ் விக்ரமின் பைசன்.. குபீர் சிரிப்பு சீன்.. செத்து செத்து விளையாடலாமா?.. ப்ளூ சட்டை மாறன் அட்டாக்

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் காளமாடன் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. முதல் நாள் வசூலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் துருவ் விக்ரமின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் பைசன் திரைப்பட விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.

துருவ் விக்ரமை வைத்து பைசன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் இந்திய கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பசுபதி, லால், அமீர், அனுபமா என பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. படமானது நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

படம் சுமார்தான்: மாரி செல்வராஜின் இயக்கம் என்பதால் இயல்பாகவே எல்லோருக்கும் படத்தின் மீது ஆவல் இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதுதான் படத்தை பார்த்த ரசிகர்களில் பலரின் கருத்து. கண்டிப்பாக இந்தப் படம் மாரி செல்வரஜுக்கு சின்ன சறுக்கல்தான். அதேசமயம் பார்க்கவே முடியாத அளவுக்கு படம் இல்லை; முந்தைய படங்களில் இருந்த மாரியின் டச்சும், வீரியமும் இதில் இல்லை என்பதுதான் குறை எனவும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

Dhruv Vikram s Bison Movie Review By Blue Sattai Maran Here are details
Photo Credit:

துருவ்வுக்கு ரெஸ்பான்ஸ்: மாரி செல்வராஜை தாண்டி துருவ் விக்ரம் இப்படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார். ஒவ்வொரு சீனிலும் அவ்வளவு உழைப்பை போட்டு அட்டகாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார். பைசன் கண்டிப்பாக துருவ்வுக்கு பெரிய அடையாளம்தான். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனலில் பைசன் பட விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அவர் அந்த விமர்சனத்தில், "ஸ்போர்ட்ஸ் ட்ராமா ஜானர் கதை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதில் நிறைய உழைப்பதற்கு தேவையில்லை. கொஞ்சம் மெனக்கெட்டாலே படம் ஹிட்தான். இந்தப் படத்தை நான் லீனியர் பாணியில் கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதுதான் படத்துக்கு மைனஸாக மாறிவிட்டது. முதல் சீனிலேயே இந்தியாவுக்காக ஹீரோ விளையாடுகிறார் என்பதை காண்பித்துவிட்டதால் போகப்போக பெரிய சுவாரஸ்யம் இல்லை. அதேபோல் ஹீரோ விளையாடுவதை அவரது தந்தை டிவியில் பார்ப்பதையும் முன்னரே காண்பித்துவிடுவதால் அந்த தந்தை கேரக்டருக்கு கதையில் நடக்கும் பிரச்னையில் ஏதாவது நடந்துவிடுமோ என்ற பதற்றமும் இல்லை. ஏனெனில் அவர்தான் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறாரே.

கதை சொல்லலில் தடுமாற்றம்: இந்தப் படத்தில் இயக்குநர் ஸ்டோரி டெல்லிங்கில் கோட்டை விட்டுவிட்டார். படம் முழுக்க வர வேண்டிய திக் திக் மொமண்ட்டுகளை இப்படி கதை சொல்லி கெடுத்துவிட்டார்கள். படத்தின் நீளம் பெரிய குறையாக இருக்கிறது. அதேபோல் படம் முழுக்க ரிப்பீட் சீன்கள் அதிகம் இருந்தன. இந்தக் கதைக்கு எதற்காக ஹீரோயின் என்றே தெரியவில்லை. இரண்டு சாதி தலைவர்களின் பாசிட்டிவ் பக்கத்தை காண்பித்திருந்தது நன்றாக இருந்தாலும் கதைக்கு உதவவில்லை.

செத்து செத்து விளையாடலாமா?: அந்த இரண்டு கேரக்டர்களும் சுய சாதியையே விமர்சனம் செய்துகொண்டது பாசிட்டிவ். இருந்தாலும் அங்கேயும் குபீர் சிரிப்பு வரக்கூடிய சீன் இருக்கிறது. ஒரு தலைவரை இன்னொரு தலைவர் கொலை செய்ய முயற்சிப்பார். அட்டாக் செய்யப்பட்ட தலைவர் குற்றுயிரும் குலையியுருமாய் இருக்கும்போது, 'இவன் பிழைத்து வந்துவிட்டால் மீண்டும் விரட்டி விரட்டி வெட்டுவோம்' என்று சொல்கிறார். இது செத்து செத்து விளையாடும் விளையாட்டு போல. நன்றாக விறுவிறுப்பாக வந்திருக்க வேண்டிய படம் சுமாருக்கும் கீழே இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X