»   »  துருக்கி பறந்த 'துருவ நட்சத்திரம்' படக்குழு

துருக்கி பறந்த 'துருவ நட்சத்திரம்' படக்குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : விக்ரம் நடித்துவரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

பல்கேரியாவில் நடந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து சென்னையில் சில முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தியது 'துருவ நட்சத்திரம்' படக்குழு. விரைவில் துருக்கி படப்பிடிப்பு தொடங்கப்படும் என படக்குழு தெரிவித்தது.

Dhruva Natchathiram shooting in Turkey

தற்போது விக்ரம், பார்த்திபன் பங்கேற்கும் 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பு துருக்கி நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விக்ரம் - பார்த்திபன் இருவரும் மோதும் பிரதான சண்டைக்காட்சியைப் படமாக்கி வருகிறார்கள்.

அதைத் தொடர்ந்து அபுதாபியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இறுதிக்கட்டமாக சென்னையிலும் படக்குழுவினர் அனைவரும் பங்குபெறும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. செப்டம்பர் 2-ம் வாரத்திலிருந்து 'சாமி 2' படப்பிடிப்புக்கு விக்ரம் தேதிகள் ஒதுக்கியிருப்பதால், அதற்குள் 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பை முடிக்க கவுதம் மேனன் திட்டமிட்டு இருக்கிறார்.

விக்ரம், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், சிம்ரன், தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை கெளதம் மேனின் 'ஒன்றாக என்டர்டெயின்மண்ட்' மற்றும் மதனின் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்' நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

English summary
Dhruva Natchathiram shooting gets started in Turkey. Vikram and Parthiban are taking part in the shooting of the main stunts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil