Don't Miss!
- Finance
அதானி குழுமத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டி பார்த்த ஹிண்டர்ன்பர்க்.. 3 நாளில் 29% மதிப்பு சரிவு!
- News
பழிக்கு பழி வாங்கிட்டோம்.. பாகிஸ்தான் பெஷாவர் மசூதி தாக்குதலுக்கு காரணம் சொன்ன தெஹ்ரிக்-இ-தாலிபான்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
நடிகர் அர்ஜுன் வெளியிடுகிறார்.. 'செம திமிரு' மூலம் தமிழுக்கு வருகிறார் துருவா சார்ஜா!
சென்னை: நடிகர் அர்ஜுனின் உறவினரும் கன்னட நடிகருமான துருவா சார்ஜா, தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
நடிகர் அர்ஜுனின் சகோதரி மகன்கள் சிரஞ்சீவி சார்ஜா, துருவா சார்ஜா. இரண்டு பேருமே கன்னடத்தில் ஹீரோவாக நடித்து வந்தனர்.
சிரஞ்சீவி சார்ஜா கடந்த வருடம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகை மேக்னா ராஜ்
நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மறைந்தபோது அவர் மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் தமிழில், காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் நடித்துள்ள மேக்னா ராஜுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.

தமிழில் அறிமுகம்
மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவே மீண்டும் பிறந்துவிட்டதாக ரசிகர்களும் உறவினர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில், துருவா சார்ஜா தமிழில் அறிமுகமாக இருக்கிறார். கன்னடத்தில் அவர் நடித்துள்ள படம், பொகுரு. இந்த படத்தில் ராஷ்மிகா, சம்பத், பவித்ரா லோகேஷ், ரவிஷங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

தமிழுக்கு வருகிறார்
நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். ஷிவார்ஜூன், பிகே,கங்காதர் தயாரித்துள்ள இந்தப் படம் மூலம் துருவா சார்ஜா தமிழுக்கு வருகிறார். தமிழில் செம திமிரு என்ற பெயரில் வெளியாகும் இந்தப்படத்தை நடிகர் அர்ஜூன்
வெளியிடுகிறார்.

கவனம் செலுத்துவேன்
இதுபற்றி துருவா சார்ஜா கூறும்போது, இது அம்மா மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம். தொடர்ந்து தமிழிலும் நடிக்கும் படி அர்ஜுன் உற்சாகப்படுத்தி வருகிறார். இனி தமிழிலும் கவனம் செலுத்துவேன். இந்தப் படம் இந்தி, தெலுங்கிலும் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.