மகான் படத்தின் துருவ் போஸ்டர் ரிலீஸ் தேதி வெளியானது!
சென்னை : நடிகர் விக்ரமை தொடர்ந்து அவரது மகன் துருவ் விக்ரம் இப்பொழுது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இப்பொழுது விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு மகான் என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்க அடுத்த சூப்பரான அப்டேட்டை அறிவித்துள்ளது படக்குழு.

மேத்தமேட்டிக்கல் சயின்டிஸ்ட்
மிகச் சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விக்ரமின் திரைப்படங்கள் மொழிகளைத் தாண்டி பல மொழி ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்பொழுது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் மேத்தமேட்டிக்கல் சயின்டிஸ்ட்டாக நடித்துள்ளார்.

ஹீரோவாக அறிமுகம்
விக்ரமை தொடர்ந்து அவரது மகன் துருவ் இப்பொழுது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கலக்கிக்கொண்டுள்ளார். அந்த வகையில் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான துருவ் விக்ரமுக்கு முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிகர் என்ற பாராட்டுக்கள் கிடைக்க படமும் நல்ல வெற்றி பெற்றது.

மகான் டைட்டில்
ஆதித்யா வர்மாவைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் துருவ் மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் படங்களுக்கு பெயர் போன கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தையும் கேங்ஸ்டர் கதை களத்தில் இயக்கி வர இப்படத்திற்கு "மகான்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிரட்டியது.

துருவ்வின் போஸ்டர்
போஸ்டரில் விக்ரம் பல கைகளுடன் தலையில் கொம்புடன் பைக்கில் செம கெத்தாக வர பார்க்கவே மிரட்டலாக இருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் மகான் படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது . முதல் போஸ்டரில் விக்ரமின் புகைப்படம் மட்டும் இருந்தது எனவே அடுத்த போஸ்டர் செப்டம்பர் 10ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. இந்த போஸ்டரில் துருவ்வின் கெட்டப் மற்றும் கதாபாத்திரம் என்னவென்று அறிவிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











