»   »  விக்ரம்- கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம்... முதல் போஸ்டர் வெளியானது!

விக்ரம்- கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம்... முதல் போஸ்டர் வெளியானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தை வெளியிடும் வேலைகளில் மும்முரமாக உள்ளார் கவுதம் மேனன்.

Dhuruva Natchaththiram first look released

அதனைத் தொடர்ந்து கவுதம் மேனன் - விக்ரம் கூட்டணி இணைப்பில் 'துருவ நட்சத்திரம்' படம் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

அதற்கு முன் படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் விக்ரம் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையைப் படித்தபடி போஸ் கொடுத்துள்ளார். அவர் வயதுக் கேற்ற வேடம் என்பதால், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.

English summary
Vikram - Goutham Menon's Dhuruva Natchaththiram first look has been released yesterday.
Please Wait while comments are loading...