»   »  துருவங்கள் பதினாறு... சொன்ன தேதிக்கு முந்தியே வர்றோம்ல!

துருவங்கள் பதினாறு... சொன்ன தேதிக்கு முந்தியே வர்றோம்ல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அறிவித்த டிசம்பர் 30-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாகவே வெளியாகிறது துருவங்கள் பதினாறு திரைப்படம்.

21 வயது இளம் இயக்குநர் கார்த்திக் நரேனின் முதல் படம் துருவங்கள் பதினாறு. கோவைையைச் சேர்ந்த இந்த திறமையான இளைஞருக்கு முதலில் யாரும் வாய்ப்புத் தரவில்லை. விளைவு... அவரது தந்தையே தயாரிப்பாளராக மாறினார். மகனின் திறமை மீது வைத்திருந்த அபார நம்பிக்கை அது.


Dhuruvangal Pathinaaru on Dec 29th

இப்போது படம் முடிந்து திரைக்கு வருகிறது. பார்த்த அத்தனை திரைப் பிரபலங்களும் இவர்தான் அடுத்த ஷங்கர், மணி ரத்னம் என்றெல்லாம் பாராட்டித் தள்ளியுள்ளனர்.


படத்தின் ட்ரைலரைப் பார்த்தபோது, இந்தப் பாராட்டுகளில் உண்மை இருக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. அத்தனை நேர்த்தியான காட்சிகள், ஒளியமைப்பு.


படத்தின் ஹீரோ நடிகர் ரகுமான். என் கேரியரில் இதுதான் பெஸ்ட் படம் என்று புல்லரித்துள்ளார். அதுமட்டுமல்ல, தனது நெருங்கிய உறவினரான ஏ ஆர் ரஹ்மானுக்கும் படத்தைப் போட்டுக் காட்டியுள்ளார். பார்த்து முடித்ததும் 'அசத்திட்டீங்க.. வாழ்த்துகள்' என்றாராம்.


இந்தப் படத்தை முதலில் டிசம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். திரையுலகினரின் பாராட்டுகள், மீடியாவில் கிளம்பிய பரபரப்பு எல்லாவற்றையும் பார்த்து, ஆர்வம் தாங்காமல் ஒரு நாள் முன்பாக டிசம்பர் 29-ம் தேதியே படத்தை வெளியிடுகிறார்கள். நைட் நாஸ்டால்ஜியா தயாரித்துள்ள இந்தப் படத்தை ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

English summary
Debutant Karthik Naren's Dhuruvangam Pathinaru to be preponed the release on Dec 29th instead of Dec 30.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil