பொன்னியின் செல்வனில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாவை விட அதிக சம்பளம் இவருக்கு தானா?
சென்னை : இந்திய சினிமாவே ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் முதல் பாக ரிலீசிற்கு இன்னும் சரியாக ஒரு மாதம் மட்டுமே உள்ளது. செப்டம்பர் 30 ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கு காரணம் இது அமரர் கல்கி நாவலாக எழுதி அதே பெயரில் படமாக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமல்ல.
பிரம்மாண்ட வரலாற்று காவியமாக உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வனில் இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலமான 50 க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் நடித்திருப்பது தான். முக்கிய கதாபாத்திரங்கள் தவிர, இன்னும் யாரெல்லாம் எந்தெந்த கேரக்டர்களில் நடித்திருப்பார்கள் என்ற ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.

15 பேர் தான் முக்கிய கேரக்டர்கள்
பொன்னியின் செல்வன் படத்தில் 50 க்கும் மேறபட்டவர்கள் நடித்திருந்தாலும் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன் உள்ளிட்ட 15 பேர் மட்டுமே முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார். சப்போர்டிங் கேரக்டர்களில் ரியாஸ் கான், வினோதினி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இவருக்கு தான் சம்பளம் அதிகம்
இந்த படத்தில் எத்தனை பேர் நடித்திருந்தாலும் டைட்டில் ரோலான பொன்னியின் செல்வன் என்ற அருள்மொழி வர்மன் ரோலில் ஜெயம் ரவி நடித்துள்ளார். லேட்டஸ்ட் தகவல்களின் படி பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்கு விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி ஆகியோரை விட ஜெயம் ரவிக்கு தான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

எவ்வளவு தான் கொடுத்திருப்பாங்க
பொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இந்த சமயத்தில் இவர்களை விடவும் ஜெயம் ரவிக்கு சம்பளம் அதிகம் என சொல்லப்படும் தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. இதனால் அப்படி எவ்வளவு தொகையை இவருக்கு சம்பளமாக கொடுத்திருப்பார்கள் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் ஹீரோ இவர் தானே?
பொன்னியின் செல்வன் கதைப்படி டைட்டில் கேரக்டர் என்னவோ ராஜராஜ சோழனான அருள்மொழி வர்மன் தான். ஆனால் கதையில் ஹீரோவாக காட்டப்படுவது, கதை முழுவதும் பயணிக்கக் கூடியவர் வந்தியத்தேவன் தான். அப்படி பார்த்தால் வந்தியத்தேவன் ரோலில் நடித்த கார்த்திக்கு தானே அதிக சம்பளம் கொடுத்திருக்க வேண்டும். எதற்காக ஜெயம் ரவிக்கு அதிக சம்பளம், அப்படி என ஸ்பெஷல் வைத்துள்ளார்கள் படத்தில் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

வெளிநாட்டிலும் ப்ரொமோஷன்
ஆனால் பொன்னியின் செல்வன் டீமிடம் இது பற்றி கேட்டால், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தவர்களின் சம்பளம் பற்றி வெளியாகும் எந்த தகவலும் உண்மையில்லை. அடிப்படை ஆதாரமும் இல்லை என்கிறார்கள். மற்றொரு புறம் பொன்னியின் செல்வன் ஆடியோ விழா செப்டம்பர் 6 ம் தேதி நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதோடு ப்ரொமோஷன் டூரை இந்தியாவின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











