Just In
- 3 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 3 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 4 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 4 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
தளவனூர் தடுப்பணை உடைந்தது-பொன்முடி தலைமையில் திமுக திடீர் போராட்டம்- அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம்
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Automobiles
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரபல ஹீரோ கொடுத்தாராமே.. கோதுமை மாவு பொட்டலத்துக்குள் 15 ஆயிரம் ரூபாய்... இதெல்லாம் உண்மையாஜி?
மும்பை: கோதுமைப் பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரத்தை வைத்து பிரபல ஹீரோ வழங்கியதாக வந்த செய்தி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
'என்னை அவுட்டேட்டட்னு நினைச்சிருப்பாங்க..' நடிக்க மறுத்த இளம் ஹீரோக்கள்..பிரபல இயக்குனர் வருத்தம்!

ஊரடங்கு
இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதன் காரணமாக ஏழைகள் மற்றும் தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உதவி வருகின்றன.

கோதுமை மாவு
நடிகர், நடிகைகளும் பணம் திரட்டி அவர்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில், இதற்கு நடிகர் ஆமிர் கான் உதவி செய்திருப்பதாக டிக்டாக் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன், டெல்லியில் ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதிக்கு ஒரு லாரி வந்ததாம். அதில் ஒரு கிலோ கோதுமை மாவுப் பொட்டலங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தாகக் கூறப்படுகிறது.

ஆமிர்கான்
ஒரு கிலோ மாவு போதாது என்பதால் பலர் இதை வாங்காமல் சென்றுவிட்டார்களாம். ஆனால், அதை வாங்கிச் சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. ஒவ்வொரு பாக்கெட்டுக்குள்ளும் ரூ.15 ஆயிரம் வைக்கப்பட்டிருந்ததாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் ஆமிர்கான் தான் இப்படி வழங்கினார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையாக இருக்குமா?
உண்மையிலேயே தேவை இருப்பவர்கள் மட்டும்தன் ஒரு கிலோ மாவுட் பொட்டலங்களை வாங்குவார்கள் என்பதால் ஆமீர்கான் வித்தியாசமாக யோசித்து இப்படிச் செய்தார் எனவும் அந்த வீடியோ கூறுகிறது. ஆனால், இதெல்லாம் உண்மையாக இருக்குமா? என்பது தெரியவில்லை. இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்று ஆமிர்கான் தரப்பில் தொடர்பு கொண்டபோது பதில் வரவில்லையாம்.