பிக் பாஸ்: ஆபாச வார்த்தைகள் பேசினாரா ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்.. இதெல்லாம் எப்படி அனுமதிக்கிறாங்க?

சென்னை: ஜிபி முத்துவையே ஆபாசமாக பேசாதீங்க என அலர்ட் செய்து உள்ளே அனுப்பியிருந்தார் கமல்ஹாசன்.

ஆனால், அசால்ட்டாக ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் கெட்ட வார்த்தைகளை பேசி வரும் வீடியோக்களை நெட்டிசன்கள் ஷேர் செய்து திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட மணிகண்டன் எல்லை மீறிய பேச்சுக்களை பேசி வருவதாக அவர் மீது குற்றச்சாட்டுக்களை ரசிகர்கள் அடுக்கி உள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்

ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் கலந்து கொண்டிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் என்றதும் செம டஃப் கொடுப்பார் என்று பார்த்தால் பஸர் டாஸ்க்கில் கூட ஒரு பஸரை கூட அடிக்காமல், கேட்டால் எல்லார் கதையும் கேட்டுட்டு இருந்தேன் சார் என கமல் கலாய்ப்பது கூட புரியாமல் பேசியதாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

கோவக்காரரா இருப்பாரோ

கோவக்காரரா இருப்பாரோ


ஜனனி எப்படி என்னை விட கெட்டவள் இருக்க முடியாதுன்னு பேசினாரோ அதை விட காமெடியா.. இருங்கடா நான் என் கேமை ஆடுறேன்.. பார்த்துக்கிறேன் என அவர் ஆத்திரப்பட்டு பேசியதை புரமோவில் பார்த்தே ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், 24 மணி நேரம் நிகழ்ச்சியில் எந்தவொரு எடிட்டும் செய்யப்படாமல் வெளியான வீடியோவில் மணிகண்டன் பச்சை பச்சையாய் பீப் வார்த்தைகளை பேசும் வீடியோக்களை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

கெட்ட வார்த்தைகள் சகஜமாக

கெட்ட வார்த்தைகள் சகஜமாக

பொம்மை டாஸ்க்கில் அடிக்கடி மணிகண்டன் கெட்டவார்த்தை பயன்படுத்தியதாக வீடியோ வெளியிட்டு பிக் பாஸ் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். ஓடிடியில் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருப்பதால் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் கெட்ட வார்த்தைகள் சகஜமாக ஒளிபரப்பாகி வருகின்றன என குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வருகின்றன.

விஜய் டிவியில் வராது

விஜய் டிவியில் வராது

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இடம்பெற்றுள்ள மணிகண்டனின் கெட்ட வார்த்தை பேசும் காட்சிகள் எல்லாம் விஜய் டிவியில் வெளியாகும் ஒரு மணி நேர எபிசோடில் எடிட் செய்யப்பட்டோ அல்லது பீப் போடப்பட்டோ தான் வெளியாகும் என தெரிகிறது. அந்த புரமோவில் கூட அவர் சொன்ன அந்த வார்த்தைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி சொல்லவில்லை

அப்படி சொல்லவில்லை

மணிகண்டன் கெட்ட வார்த்தை பேசிய வீடியோவை ஷேர் செய்து பிக் பாஸ் ரசிகர்கள் திட்டி வரும் நிலையில், அப்படியெல்லாம் அவர் பேசவே இல்லை ஒருத்தரும் என்று தான் சொன்னார் என அவரது ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர். அசீம் வாடி போடின்னு பேசியதே பெரிய பஞ்சாயத்து ஆகிய நிலையில், மணிகண்டன் இப்படி பேசியது எவ்வளவு பெரிய தவறு என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X