தனுஷின் 20 ஆண்டு சினிமா வாழ்க்கை...எண்ணம் போல் வாழ்க்கைன்னு யாரைச் சொன்னார்?
சென்னை : நடிகர் தனுஷ் சினிமாவிற்கு நடிக்க வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதற்காக கடந்த சில நாட்களாகவே தனுஷிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தனுஷ் பற்றிய தங்களின் எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர்.
நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என பல திறமைகளைக் கொண்டவர் தனுஷ். டைரக்டர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ், 2002 ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராகவும், ஹீரோவாகவும் தனது தந்தை கஸ்தூரி ராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

20 ஆண்டுகளில் 46 படங்கள்
இதுவரை 46 படங்களில் நடித்துள்ள தனுஷ், 4 முறை தேசிய விருது வாங்கி உள்ளார். இரண்டு முறை சிறந்த நடிகருக்காகவும், இரண்டு முறை சிறந்த தயாரிப்பாளருக்காகவும் தேசிய விருது வாங்கி உள்ளார். இது தவிர ஃபிலிம்ஃபேர், எடிசன், சைமா உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் தனுஷ். பவர் பாண்டி படத்தின் மூலம் டைரக்டராகவும் அறிமுகமானார். 3 படத்தின் மூலம் தயாரிப்பாளரானார்.

தனுஷ் வெளியிட்ட கடிதம்
தனுஷ், சினிமாவிற்கு நடிக்க வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பலரும் அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்தனர். தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் தனுஷ். இதில் டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தன்னுடன் நடித்தவர்கள், மீடியாக்கள், டிவி சேனல், ரசிகர்கள், அப்பா கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன், அம்மா என அனைவருக்கும் தனித்தனியாக குறிப்பிட்டு உருக்கமாக நன்றி கூறி இருந்தார் தனுஷ்.

எதுக்கு அந்த வார்த்தை
அதே சமயம் நன்றி கடிதத்தில் கடைசியில், எண்ணம் போல் வாழ்க்கை என கூறி முடித்திருந்தார். தனது பெயரையும் தனுஷ் என குறிப்பிடாமல் 'டி' என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார் தனுஷ். நன்றி சொல்லி கடிதத்தில் எதற்காக எண்ணம் போல் வாழ்க்கை என தனுஷ் குறிப்பிட்டுள்ளார். அவர் யாரை குறிப்பிடுகிறார் என பலரும் கேட்டு வருகின்றனர். எல்லோரும் வாழ்த்து சொன்னார்கள். ஆனால் ஐஸ்வர்யா ரஜினி, தனுஷிற்கு வாழ்த்து சொன்னாரா என பலரும் கேட்க துவங்கி விட்டனர்.
Recommended Video

வாழ்த்து சொன்னாரா ஐஸ்வர்யா
மற்றொரு புறம் தனுஷ் தனது திரையுலக பயணத்தை துவங்கி 20 ஆண்டுகள் நிறைவு செய்ததற்காக உலகமே அவருக்கு வாழ்த்து சொன்னது. ஆனால் ஐஸ்வர்யா ரஜினி இதுவரை அப்படி ஒன்று நடந்ததாகவே காட்டிக் கொள்ளாமல், தனது வழக்கமான வேலைகளை செய்து வருகிறார். ஆனால் ஐஸ்வர்யா இயக்கிய பயணி மியூசிக் வீடியோ வெளியான போது தனுஷ், ஃபிரண்ட் என குறிப்பிட்டு ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து கூறி இருந்தார். ஆனால் அப்படி பொதுவாக குறிப்பிட்டு கூறி ஐஸ்வர்யா இதுவரை வாழ்த்து ஏதும் கூறவில்லை.

மறுபடியும் முதல்ல இருந்தா
ஒருவேளை ஐஸ்வர்யா வாழ்த்து சொல்லவில்லை என்ற கோபத்தில் தான், எண்ணம் போல் வாழ்க்கை என மறைமுகமாக அவரை தாக்கி, தனது நன்றி கடிதத்தில் தனுஷ் குறிப்பிட்டுள்ளாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நண்பர்களாக தங்களின் உறவு தொடரும் என கூறி பிரிந்தவர்கள், இப்போது ஏன் பகையாளிகளை போல் நடந்து கொள்கிறார்கள். என்ன தான் பிரச்சனை இவர்கள் இருவருக்குள்ளும் என கேட்டு, மறுபடியும் முதலில் இருந்து விவாகரத்திற்கான காரணம் குறித்து ஆராய துவங்கி உள்ளனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











