Don't Miss!
- News
வள்ளுவரை விட கருணாநிதி சிறந்தவரா? பேனா நினைவு சின்ன கருத்து கேட்பு கூட்டத்தில் பாஜக கேள்வி-சலசலப்பு
- Finance
Budget 2023: பட்ஜெட் நாளில் கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தை எப்படி இருந்தது தெரியுமா?
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிரெண்டுன்னு சொன்ன தனுஷ்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கோபமான அந்த செயல்...அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான பயணி ஆல்பம் வீடியோவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ் பிரெண்ட் என ஐஸ்வர்யா ரஜினிகாந்தை குறிப்பிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
கடந்த ஜனவரி 17ம் தேதி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து ஒரு மனதாக பிரிகிறோம் என்கிற அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை இப்படி ஏன் திடீரென இருவரும் முடித்துக் கொண்டனர் என்கிற கேள்வி பலரது மனதிலும் எழுந்தன.
சரஸ்வதியின்
சபதம்...
தமிழுக்கு
மீண்டும்
ஜிஎம்
போஸ்ட்
கிடைக்குமா?

அமைதி காத்த ரஜினி
நடிகர் தனுஷை மருமகனாக பார்க்காமல் தனது மூத்த மகனாகவே பார்த்து வந்தார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில், திடீரென ரஜினிகாந்தின் மூத்த மகளை பிரியப் போகிறேன் என தனுசும் தனது கணவரை பிரியப் போகிறேன் என ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் சொன்னதும் நடிகர் ரஜினிகாந்தை ரொம்பவே பாதித்தது. ஆனால், இதுவரை அவர்கள் பிரிவு குறித்து எந்தவொரு அறிவிப்பையும் நடிகர் ரஜினிகாந்த் வெளியிடவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என விட்டு விட்டார்.

பெயரை நீக்கவில்லை
இருவரும் இனிமேல் கணவன் மனைவியாக இருக்கப் போவதில்லை என அறிவித்த பின்னரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ஐஸ்வர்யா தனுஷ் எனும் பெயரை மாற்றாமலே இருக்கிறார். மேலும், பெரியவர்கள் மற்றும் மகன்களை வைத்து மீண்டும் தனுஷ் உடன் இணையும் முயற்சியை அவர் மேற்கொண்டு வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இயக்கத்தில் பிசி
தனுஷை வைத்து '3' படத்தையும், கெளதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தையும் இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் அதற்கு பிறகு வேறு எந்த படத்தையும் இயக்காமல் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்தபடி இருந்து வந்தார். இந்நிலையில், விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் அவர் இயக்கிய முதல் ஆல்பம் பாடலான பயணி பல மொழிகளில் வெளியானது.

ரஜினி, மோகன்லால், அல்லு அர்ஜுன்
பயணி ஆல்பம் பாடல் பல மொழிகளில் உருவான நிலையில், அதனை ரஜினிகாந்த், மோகன்லால், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட சினிமா ஜாம்பவான்கள் வெளியிட்டனர். மேலும், பல பிரபலங்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனைவரும் வாழ்த்தி வரும் நேரத்தில் நாம வாழ்த்தாவிட்டால் நல்லா இருக்காது என நினைத்த தனுஷ் தன் பங்குங்கு தனது வாழ்த்தையும் தெரிவித்தார்.

பிரெண்டுன்னு போட்டு
ஆனால், தனுஷ் தனது வாழ்த்து செய்தியில் பிரெண்ட் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எனக் குறிப்பிட்டு இருந்தது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது. இருவரும் எப்படியாவது ஒன்றாக மீண்டும் இணைந்து விடுவார்கள் என நினைத்து வந்த நிலையில், இனிமேல் நண்பர்கள் மட்டும் தான் என தனுஷ் அறிவித்து விட்டார்.

தனுஷ் பெயர் நீக்கம்
அவர் அப்படி வாழ்த்து சொன்னதும், பதிலுக்கு காட்ஸ்பீட் என போட்டு நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதே வேகத்தில் தனது இன்ஸ்டாகிராம் பயோவில் இருந்த ஐஸ்வர்யா தனுஷ் பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றிவிட்டார். ஆனால், தற்போது கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் தனது ஐடியில் இருக்கும் ஐஸ்வர்யா தனுஷ் பெயரை அவர் மாற்றவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை குறிப்பிடுகிறாரா? ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மகன்களுடன் ஜாலியாக
மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், எந்தவொரு போஸ்ட்டும் போடாத தனுஷ் தனது மகன் யாத்ராவை ஊட்டியில் சந்தித்து பேசினார். நேற்று சென்னை தீவுத் திடலில் நடந்த இளையராஜாவின் இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்கும் தனது இரு மகன்களுடன் கலந்து கொண்டு கச்சேரியை ரசித்தார் தனுஷ்.